உயிருக்கு போராடிய தாயாரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது

286
கனடா நாட்டில் கார் விபத்தில் சிக்கிய தாயாரை அவரது 9 வயது மகன் துணிச்சலுடன் காப்பாறிய செயலை பாராட்டி அவருக்கு ’துணிச்சலுக்கான’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள வில்லியம்ஸ் லேக் நகரில் Josef Aschwanden என்ற 9 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.

கடந்த புதன் கிழமை அன்று வீட்டிற்கு சில பொருட்களை அவர்களது காரில் கொண்டு வந்துள்ளனர்.

வீட்டில் தந்தை இல்லாததால் சிறுவனின் தாயார் காருக்கு அருகில் சென்று அங்குள்ள பொருட்களை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது கார் திடீரென பின்னோக்கி நகர்ந்து தாயார் மீது மோதி அவர் உடல் மீது நின்றுள்ளது. காரை அகற்ற முடியாமல் வலியால் துடித்த தாயாரை காப்பற்ற சிறுவன் விரைந்து வந்துள்ளான்.

சிறுவனாலும் காரை நகர்த்த முடியாததால் உடனடியாக வீட்டிற்கு சென்று மீட்பு குழுவினரின் 911 என்ற அவசர எண்ணை தொடர்புக்கொண்டு விபத்து குறித்து தகவல் அளித்துள்ளான்.

அவசர எண்ணான 911 பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் சில தினங்களுக்கு முன்னர் தான் தனது பெற்றோர்களிடம் தெரிந்துகொண்டுள்ளான்.

அது மட்டுமில்லாமல், வீட்டிற்குள் இருந்த ஒரு நீண்ட உடுப்பை எடுத்து வந்து தாயாரை சுற்றி போர்த்தி விட்டு உடலில் இருந்து வெப்பம் குறையாமல் பாதுகாத்துள்ளான்.

சில நிமிடங்களுக்கு பிறகு மீட்புக்குழுவினர் அங்கு வந்து தாயாரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவனின் துணிச்சல் மிக்க செயலை பாராட்டி Cariboo Regional District துறை அதிகாரிகள் சிறுவனுக்கு ‘துணிச்சலுக்கான’ விருதை கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளனர்.

சிறுவனை பாராட்டி பேசிய Steve Forseth என்ற அதிகாரி, ‘விருது வென்ற சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவசர எண்ணான 911 பற்றி தெரிந்துக்கொண்டு அதனை உரிய நேரத்தில் பயன்படுத்தியது பாராட்டுதலுக்கு உரியது.

இந்த சிறுவனை போன்று அனைத்து வயதினரும் 911 அவசர எண் குறித்து தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமாகும் என அவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

SHARE