விண்வெளி வீரர்கள் மலம் கழிப்பது எவ்வாறு? விளக்கமளித்த டிம் பீக் 

265
விண்வெளியில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு மலம் கழிக்கின்றனர் என்பது குறித்த கேள்விக்கு பிரித்தானிய விண்வெளி வீரர் Tim Peake பதிலளித்துள்ளார்.பிரித்தானிய நாட்டை சேர்ந்த விண்வெளி வீரரான டிம் பீக் என்ற ஆராய்ச்சியாளர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில்(ISS) தங்கி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில், ஆய்வு மையத்தில் உள்ள கருவி ஒன்று பழுதானத்தைத் தொடர்ந்து, ஆய்வு மையத்தை விட்டு வெளியேறிய டிம் பீக், அந்த கருவியை பழுதுபார்த்தார், இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் பிரித்தானிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், விண்வெளி வீரர்க எவ்வாறு மலம் கழிக்கின்றனர் என்பது குறித்த கேள்வி மக்களிடையே பரவலாக உள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள டிம் பீக், ஆய்வு மையத்தில் உள்ள கழிவறையோடு இணைக்கப்படுள்ள ஒரு மஞ்சள் நிற குழாய்யினை எடுத்துக்காட்டுகிறார், அதில் தான் மலம் கழிக்க வேண்டும். அந்த குழாயின் மேற்புற மூடியைத்திறந்துவிட்டு, கீழிலுள்ள பட்டனை திருப்புவதன் மூலம் அதிலிருந்து காற்று வெளியேறுகிறது.

அந்த காற்றின் மூலம், மலம் அனைத்தும் வெளியேறி விடும் என்று பதிலளித்துள்ளார், இதற்கு முன்னர் விண்வெளி வீரர்கள், தங்களது சிறுநீரகத்தை மறுசுழற்சி செய்து குடிப்பது தொடர்பான வீடியோவை நாசா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

toilet_astronut_002

SHARE