உலகின் மிக ஆபத்தான வளைவுகள் கொண்ட சாலை 

303
உலகின் மிக ஆபத்தான சாலைகள் குறித்து இணையத்தளம் ஒன்று நடத்திய ஆய்வில் வியக்க வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான உயிர்களை பலிவாங்கிய உலகின் மிக ஆபத்தான சாலைகள் குறித்து இணையத்தளம் ஒன்று ஆய்வுகள் மேற்கொண்டது.

இதில் 66 மைல்கள் நீளமும், மிகவும் ஆபத்தான 29 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட துருக்கியின் Bayburt D915 எனும் சாலை தெரிவாகியுள்ளது.

இச்சாலை ஆறாயிரம் அடி உயரம் கொண்ட Soganli மலை மீது அமைந்துள்ள போதும் வாகன ஓட்டிகளை காக்கும் பொருட்டு எவ்வித பாதுகாப்பு வேலியும் இல்லை.

கடும் குளிர் காலத்தில் அதிக பனிப்பொழிவும் உறைபனியும் ஏற்படுவதால் இந்த சாலையின் ஒருபகுதியை பெரும்பாலும் மூடியே வைக்கின்றனர்.

இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவர்கள் என கூற்ப்படுகிறது.

1916 ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இந்த சாலை, மிகவும் ஆபத்தான பொலிவியா நாட்டின் ”மரண சாலை”யை விடவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.

துருக்கியின் இந்த சாலையைத் தொடர்ந்து மிகவும் ஆபத்தான சாலையாக இந்தியாவின் Keylong_Kishtwar சாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

144 மைல்கள் நீளம் கொண்ட இந்த சாலையிலும் வாகனத்தை செலுத்துவது மிகவும் சிரமமென கூறப்படுகிறது.

இந்த வரிசையில் உலகின் மிக ஆபத்தான சாலைகளின் பட்டியல் இது:

1. Turkey- D915 Bayburt Road, 2. India- Keylong-Kishtwar Road, 3. New Zealand- Skippers Canyon Road, 4. France- Italy border- La piste de I’Amitie,

5. Bolivia- Death Road, 6. Pakistan- Fairy Meadows Road, 7. Siberia- BAM Road, 8. Northern Peru- Ruta 3N, 9. Iceland- Route 622.

SHARE