அகதிகளால் எங்களுக்கு ஆபத்து”: ஜேர்மன் சான்சலரை கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்ட இளம்பெண்

288
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகளால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுருப்பதாக அந்நாட்டு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலை கடுமையாக திட்டி இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் குடியேறியுள்ள அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் இஸ்லாமிய அகதிகளால் ஜேர்மன் குடிமகளான Bibi Wilhailm என்ற 16 வயதான இளம்பெண், தான் எதிர்க்கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டு 20 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஜேர்மன் மொழியில் இளம்பெண் பேசியுள்ள அந்த வீடியோவின் தமிழாக்கம்:

”ஹலோ, ஜேர்மனியில் அகதிகளால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அன்றாட செய்திதாள்கள் மூலம் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். ஆனால், நான் பதிவேற்றும் இந்த வீடியோ ஜேர்மனியின் உண்மை நிலையை உங்களுக்கு எடுத்துக்காட்டும் என நம்புகிறேன்.

எனக்கு 16 வயது ஆகிறது. ஒரு இளம்பெண்ணான என்னால் எனது வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சமாக இருக்கிறது. உதராணமாக, குடும்பத்தினருடன் வெளியே சென்றாலும், நண்பர்களுடன் திரைப்படத்திற்கு சென்றாலும், என் மனதில் உள்ள அந்த அச்சம் நீங்காமல் இருக்கிறது.

இதனால், பல நேரங்களில் நான் எனது வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். எனினும், சில நேரங்களில் மாலை 6 மணி வரை வெளியில் இருந்தால், என்னை சுற்றி ஆபத்துக்கள் இருப்பது போலவே உணர்கிறேன். ஒரு இளம்பெண்ணான என்னால் எனது நாட்டிலேயே சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாமல் தவிக்கிறேன்.

நான் இனப்பாகுபாடு பார்க்கும் பெண் இல்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். ஆனால், ஒரு நாள் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடந்த தாக்குதல் என்னால் சாகும் வரை மறக்க முடியாது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தேன்.

இதனை பார்த்து எனது உறவினர்கள் “நீ இன்னும் வளர வேண்டும்” என எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். ஆனால், இதுபோன்ற ஒரு அச்சமூட்டும் சூழ்நிலையில் தான் பெண்களான நாங்கள் வளர வேண்டுமா?

சமூக வலைத்தளங்களில் ’17 வயது, 16 வயது, 12 வயது நபர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்’ என்ற செய்தி தினமும் வெளியாகி எனது அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.

இது எல்லாம் நடைபெறுவதற்கு காரணம்……நீங்கள் (அகதிகள்) தான்.

உண்மையில் அகதிகள் ஏன் இவ்வாறு நடந்துக்கொள்கின்றனர் என எனக்கு புரியவில்லை. அதேசமயம், இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஜேர்மன் அரசு மெளனமாக ஏன் இருக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை. எனக்கு இதற்கான காரணங்கள் தெரிய வேண்டும்.

ஹலோ, ஜேர்மன் நாட்டு ஆண் குடிமக்களே, இந்த அகதிகள் உங்களுடைய குழந்தைகளை கொல்கிறார்கள். உங்கள் வீட்டு பெண்களை கொல்கிறார்கள். எங்களுக்கு ஆண்களாகிய உங்களது பாதுகாப்பு வேண்டும்.

பெண்களாகிய நாங்கள் சூரியன் மறைந்த பின்னர் கடைக்கு செல்வதற்கு கூட அச்சமாக இருக்கிறது. எங்களுக்கு உங்களுடைய பாதுகாப்பு வேண்டும்.

ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகள் சொகுசான பங்களாக்களில் வசித்துக்கொண்டு, சுவையான மதுபானங்களை அருந்திக்கொண்டு இங்கு நடப்பதை அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜேர்மன் ஆண்களே, உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள். இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்.

ஒரு முறை நானுன் எனது தோழியும் வீதியில் நடந்து சென்றுக்கொண்டு இருந்தோம். அப்போது சில அரபு நாட்டு இஸ்லாமியர்கள் ‘அல்லா…அல்லா…அல்லா’ என கோஷமிட்டுக்கொண்டு இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை கொல்லுங்கள் என கத்திக்கொண்டு சென்றனர்.

இதனை பார்த்து நான் என்ன செய்ய வேண்டும்? நானும் அவர்களை போல் முகத்திரையை அணிந்துக்கொள்ள வேண்டுமா? நான் எதற்காக இஸ்லாமிய மதம் மாற வேண்டும்?

அவர்களுக்கு இஸ்லாமிய மதம் மீது நம்பிக்கை இருந்தால், அவர்கள் பின்பற்றட்டும். ஆனால், மற்றவர்களையும் அல்லா மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என தூண்டுவது ஏன்? இதற்கு எந்த மதமும் இல்லாமல் இருந்தாலே நல்லது தான்.

உங்களை தயவுகூர்ந்து கேட்கிறேன்….ஏதாவது செய்யுங்கள்

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால், அவர்கள் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள். நடப்பது பிரச்சனை தான் என விளக்கம் அளித்துவிட்டு அதற்கான தீர்வை ஏற்படுத்த மறுக்கிறார்கள். நமக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க இந்த அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை.

ஆனால், நீங்கள் (ஆண்கள்) நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டும்….ப்ளீஸ்!!!

கோடை காலங்களில் ‘T-Shirt’ அணிந்துக்கொண்டு வெளியே செல்ல முடியவில்லை. வெயில் நேரத்தில் மெலிதான ஆடைகளை தான் உடுத்த முடியும். ஆனால், இந்த ஆடைகளால் தூண்டப்படுவதாக இஸ்லாமிய அகதிகள் எங்கள் மீது பாலியல் தாக்குதலை நடத்துகின்றனர். இது மிக மோசமானது.

அகதிகள் ஒழுங்காக ஒருங்கிணைக்கப்படாததால், ஜேர்மனியின் உண்மை வாழ்க்கையே மாறிவிட்டது.

அகதிகளுக்கு நாங்கள் பல உதவிகளை செய்கிறோம். நிதியுதவி செய்கிறோம். ஆனால், அவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும், அரசிடமிருந்து அதிக நிதியுதவியை பெற்றுக்கொள்ள மட்டுமே முயற்சிக்கின்றனர்.

ஜேர்மன் ஆண்களே, தயவுசெய்து வீதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுங்கள். உங்களுடைய குழந்தைகள், பெண்களை காப்பாற்ற இதனை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும்.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் அவர்களே, மிக்க நன்றி…..ஜேர்மனி நாட்டை அழித்ததற்கு மிக்க நன்றி!!! இனிமேல் உங்கள் மீது எனக்கு மரியாதை ஏற்படாது.

உண்மையில் நீங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு புரிகிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.

சான்சலரே….உங்கள் கண்களை திறந்து பாருங்கள். வெளியில் நடக்கும் அட்டூழியங்கள் உங்களுக்கு தெரிகிறதா? 16 வயதான நான் எனது வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறேன். இந்த மாற்றம் தான் உங்களுக்கு தேவையா? இதை தான் நீங்கள் வளர்ச்சி என கூறுகிறீர்களா? ஜேர்மனை பூண்டோடு அழித்து விட்டீர்கள்!!

இது தான் உண்மை. எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. எங்களால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை. இந்த துயரமான உண்மையுடன் இந்த வீடியோவை முடிக்கிறேன்.

ஆனால், ஜேர்மன் ஆண்களே, தயவு செய்து உங்கள் குழந்தைகளை, பெண்களை காப்பாற்ற வெளியே வாருங்கள். நீங்கள் தான் அப்பாவிகளான எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.” என்ற வேண்டுகோளுடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.

SHARE