கொள்ளையனை சாமர்த்தியமாக பிடித்தக்கொடுத்த அகதி: உடனடியாக வசிப்பதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள்

303
இத்தாலியில் கொள்ளையடிக்க முயன்றவரை தைரியமாக எதிர்த்து போராடிய அகதியை பாராட்டும் விதமாக உடனடியாக குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் மிராஃபியொரி(Mirafiori) மாவட்டத்தில் லிடில் என்ற சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.

சம்பவதன்று, ஏராளமான மக்கள் தங்களுக்கு தேவையா பொருட்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிகொண்டிருந்தனர்.

அப்போது கையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் காசாளரை மிரட்டி பணம் அனைத்தையும் தரும்படி கேட்டுள்ளார்

பின்னர் பணத்தை பெற்றுகொண்டு அவர் தப்ப முயன்றபோது அருகில் இருந்த நபர் ஒருவர் கொள்ளையனை மடக்கி பிடித்துள்ளார்.

பொலிசார் வரும்வரை கொள்ளையனை பிடித்துவைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கொள்ளையனை கைது செய்தனர்.

பின்னர் கொள்ளையனை சாமர்த்தியமாக பிடித்த நபரிடம் விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர் என்பதும் சட்டவிரோதமாக இத்தாலியில் வசிப்பதும் தெரியவந்தது.

எனினும் அவரின் செயலை பாராட்டும் விதமாக அவரை கைது செய்யாமல் குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இத்தாலியில் வசிப்பதற்கு குடியிருப்பு அனுமதியை பெற்றுதந்தனர்.

SHARE