காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு?

299
தாய்லாந்து கடற்கடையில் மலேசிய விமானம் MH370க்கு சொந்தமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்க்கு 239 பயணிகளுடன்  சென்ற விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாயமானது.

நீண்ட தேடலுக்கு பிறகு இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இறக்கை காணாமல் போன விமானத்தின் இறக்கையாக இருக்கலாம் என்று பிரான்ஸ் கூறியது.

மலேசிய அரசாங்கமும் கண்டுபிடிக்கப்பட்டது MH370 விமானத்துக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறியது.

இந்நிலையில் தாய்லாந்தின் கடற்கரை அருகே மிதந்துவந்த மர்ம பொருள் ஒன்றை கிராமத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இது, மலேசிய விமானம் MH370யின் பாகமாக இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அந்த பொருள் விமானத்துக்கு சொந்தமானது தான் என்று அரசாங்கத்தின் சார்பாக என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்தவர்கள் அனைவரும் மரணமடைந்துள்ளனர் என்ற கூற்றை விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் நம்ப மறுத்துள்ளனர்.

மேலும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பினைக்கைதியாக வேறு எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE