சீகா{zika} வைரஸ் 25 நாடு பதட்டம் இலங்கையில் பாதிப்பு இல்லை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன்

281

 

ஸிகா தொற்று பரவலடைந்துள்ள பகுதிகளுக்கு சென்று திரும்பியுள்ள மூன்று கனேடியர்களுக்கு ஸிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (புதன்கிழமை) கனடாவில் அதாவது உள்ளூரில் ஸிகா வைரஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என தெரிவித்த கனேடிய சுகாதார அமைச்சர் ஜேன் பிலிப்பொட், ‘ நான் தவறாக தெரிவிக்கவில்லை என நம்புகின்றேன்.தற்போது கண்டறியப்பட்டுள்ள மூன்று கனேடியர்களும் ஸிகா வைரஸினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அங்கிருந்து அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

zika-1-600x407


ஸிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள மூவரில் இருவர் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் இருவரும் எல் சல்வடோர் மற்றும் கொலம்பியாவிலிருந்து திரும்பியுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா நோய்க் கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும். மாகாண அறிக்கையின் பிரகாரம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இருவரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் இருவரும் கருத்தரிப்புடன் தொடர்புபடவில்லை எனவும் அவர்களுக்கு எப்போது வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்பேட்டாவைச் சேர்ந்த மூன்றாமவர் ஸிகா வைரஸ் பரவலடைந்துள்ள வெளிநாட்டுடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்துள்ள அல்பேட்டா சுகாதார துறை, அவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பிலோ அவரது மருத்துவ தகுதி தொடர்பிலோ இதுவரை எதுவும் அறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. எனினும் அவருக்கு இரண்டாவது பரிசோதனை ஆய்வில் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க மாகாணத்தின் பொதுச் சுகாதாரத்திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீகா வைரஸ் தொற்றை தடுக்குமாறு அமெரிக்க விஞ்ஞானிகள் கோரிக்கை

 

சீகா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க மருத்துவ சஞ்சிகை ஒன்றில் எபோலா தொற்று நோய் பரவலின் மூலம் பெற்றுக்கொண்ட படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு, சீகா வைரஸை தடுப்பதற்காக உடனடியாக நிபுணர்களின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மூளைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சீகா வைரஸ் பிரேஸில் உள்ளிட்ட 20 நாடுகளில் அதிகமாக பரவி வருவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீகா வைரஸை கட்டுப்படுத்த லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசுவ் (Dilma Roussef) கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நுளம்பினால் பரவி, பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய, சீகா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்துகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து விரைவுச் சோதனைகள் அவசியம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

SHARE