மஹிந்த சரணம் கச்சாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். பௌத்தத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள- ஆங்கில ஊடகங்கள் சிலவும், ஊடகவியலாளர்கள் சிலரும் இனவாதத்தைப் பரப்புவதில் குறியாக இருக்கின்றார்கள். அவர்கள், ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மக்கள் ஆணை பெற்ற அரசாங்கத்தினை அவர்களினால் கவிழ்க்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாவது, “அபேராம விகாரையில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களின் கூட்டத்தில் முக்கிய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி இனவாதத் தீயை எரியவிட நினைக்கின்றார்கள்.
நீங்கள் ஆயிரம் பேரை வீதிக்கு இறக்கினார். நான் பத்தாயிரம் பேரை இறக்குவேன். தீய சக்திகளை எவ்வாறு அடக்குவது என்று எமக்குத் தெரியும்.
நாம் புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, சிலர் மஹிந்த சரணம் கச்சாமி என்றார்கள். அவர்கள் இப்போது, பௌத்தம் பற்றி பேசுகின்றார்கள். அவர்களுக்கு அதற்கான அருகதை ஏதுவும் இல்லை.” என்றுள்ளார்.