போட்டியின் போது வரைமுறையை மீறியதாக இந்தியாவின் ஹர்திக்பாண்டியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கடந்த 26-ம் திகதி அடிலெய்டில் நடைபெற்றது.
இதில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 188 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்று என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது.
இந்நிலையில் ஆட்டத்தின் 16-வது ஓவரை பாண்டியா வீசினார்.
அப்போது யுவராஜ் சிங்கிடன் கேட்க் கொடுத்து கிறிஸ் லைன் ஆட்டமிழந்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த பாண்டியா அதிக அளவில் கூச்சலிட்டப்படி மைதானத்தில் ஓடினார்.
தற்போது, அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போட்டியில் விக்கெட்டுக்களை வீழ்த்தியபின் சந்தோஷத்தை வெளிப்படுத்தவுள்ள வரைமுறையை பாண்டியா மீறிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரது ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.