கல்வியறிவில் பின்தங்கிய இளைஞர்களை கொண்ட நாடு எது? 

292
வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் கல்வியறிவில் பிந்தங்கிய இளைஞர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரித்தானியா இளைஞர்களே கல்வியறிவில் மிகவும் பிந்தங்கியிருப்பதாக புதிய அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை கணிதமும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 9 மில்லியன் இளைஞர்கள் மிகவும் குறைவான கல்வி அறிவையே பெற்றுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

உலகில் வளர்ச்சியடைந்த 23 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட இந்த அறிக்கையில், பல்கலைக்கழங்களில் பயின்றுவரும் பிரித்தானிய இளைஞர்களில் 5-ல் ஒருவர் அடிப்படை அறிவை மட்டுமே கொண்டுள்ளதாகவும்,

மேம்படுத்தப்பட்ட நிலைகளில் தடுமாறுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டின் தரவுகளை வைத்து இந்த அறிக்கையை தயார் செய்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு,

தற்போது இருக்கும் சூழலில் இந்த நிலை முற்றிலும் மாற வாய்ப்பு அதிகம் எனவும், 18 வயது வரை கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவகள், புதிய தலைமுறையினரே கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் மிகவும் பிந்தங்கி காணப்படுவதாக குற்றம்சாட்டினர்.

கணிதம் மற்றும் மொழியறிவில் மிகவும் பிந்தங்கிய நாடுகளில் தென் கொரியா கடைசி இடத்தினை பிடித்துள்ளது.

SHARE