அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
கடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச, கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருகியது ..மகிந்தர் எதனைஅப்பாவிமக்களை இப்படி ஏற்றி கொலை செய்தீர் …தலைவலி தனக்கும் வந்தால்தானே வலியின் அருமை பெருமை புரியும்…மகிந்தா மாமூ.
– See more at: http://www.canadamirror.com/canada/56321.html#sthash.BU5BTido.dpuf