ஞானசாரரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்காக இறைவனுக்கு தாங்கள் தமது தலைமுடியை காணிக்கை

270

 

தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயார் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி மதவழிபாடுகளில் பொதுபலசேனா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பத்தை விளைவித்தார் எனவும், நீதிமன்றத்தினை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே அவரின் விடுதலையை வலியுறுத்தி மதவழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இதேவேளை ஞானசாரரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்காக இறைவனுக்கு தாங்கள் தமது தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதாக கூறி பலர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இந்த மதவழிபாட்டின் போது ஒரு தொகுதி மக்கள் கூட்டம் கண்டி தலதா மாளிகையில் கூடியிருந்ததை பார்க்க முடிந்துள்ளது.

SHARE