ஆயிரக்கணக்கில் அகதி சிறுவர்கள் மாயம்

293
ஐரோப்பாவுக்குள் வந்து சேரும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தலைமறைவாகும் பின்னணியில் பாலியல் தொழில் கும்பல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ஐரோப்பாவுக்குள் வந்து சேரும் ஆதரவற்ற சிறுவர்கள் மீது நோட்டமிட்டு சர்வதேச அளவில் இயங்கும் கும்பல்கள் இயங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த கும்பல்களால் கடத்தப்படும் சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் கொத்தடிமைகளாகவும் அந்த கும்பல் பயன்படுத்தி வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் அகதிகள் எனும் போர்வையில் 26,000 சிறுவர்களை அந்த கும்பல் ஐரோப்பாவுக்குள் அனுப்பி வைத்துள்ளது என இதுகுறித்து ஆய்வு நடத்திவரும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

குற்றசெயல்கள் புரியும் கும்பல்களால் கடத்தப்பட்டிருக்கும் 10,000 சிறுவர்கள் தற்போது அதிகாரிகளால் தேடப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறும் அதிகாரிகள்,

கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனி மற்ரும் சுவீடன் நாடுகளில் மட்டும் உறவினர்கள் எவருமின்றி ஆதரவற்ற சிறுவர்கள் 90,000 பேர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐரோப்பாவில் வந்து சேரும் அகதிகளில் மூன்றில் ஒருவர் சிறுவர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அகதி முகாம்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணங்களால் மட்டுமே குற்றவாளிகள் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்துவதாகவும் சர்வதேச சமூகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

SHARE