பிரித்தானிய பிரதமரின் மகனை பள்ளியில் சேர்க்க முடிவு

289
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் மகனை சுமார் 18,000 பவுண்ட் கட்டணத்தில் அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய தனியார் பள்ளியில் சேர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 2009ம் ஆண்டு ’பிரித்தானியாவில் அரசு பள்ளிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்த கல்வி முறையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, எனது குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களை அரசு பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைப்பேன். தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினால், கற்பனை பண்ண இயலாத அதிக கட்டணத்தை செலுத்த நேரிடும்’ என பிரதமர் கேமரூன் கூறியிருந்தார்.

ஆனால், பிரதமரின் இந்த கருத்தை அவரே மீறும் வகையில் கமெரூன் மற்றும் சமந்தா பெற்றோரின் மகனான எல்வினை லண்டனுக்கு லண்டனில் உள்ள Colet Court Preparatory பள்ளியில் சேர்க்க இருவரும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பள்ளியில் கல்வி முறை மிகவும் சிறப்பாக இருந்தாலும், ஒரு மாணவர் ஆண்டுக்கு 18,000 பவுண்ட் கட்டணமாக செலுத்த வேண்டும்.

எல்வின் அடுத்த மாதம் 10 வயதை எட்டுவதால், இதே பள்ளியில் சேர்க்கலாம் என பெற்றோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய பிரித்தானிய சான்சரான ஜோர்ஜ் ஓஸ்போர்ன் இதே பள்ளியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், மகனை தனியார் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக இதுவரை கமெரூன் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடவில்லை.

SHARE