கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்த இரண்டு வயது சிறுமி

265
பிரித்தானியாவில் வீட்டின் அருகே திறந்திருந்த கழிவுநீர் வாய்க்காலுக்குள் 2 வயது சிறுமி விழுந்ததால் கட்டுமான நிறுவனம் மீது தாயார் வாழக்கு தொடுத்துள்ளார்.பிரித்தானியாவின் பிர்மிங்ஹாம் பகுதியில் குடியிருந்து வருபவர் 25 வயதான ஆன்மேரி, இவர்களின் குடியிருப்பு அருகே அந்த பகுதியின் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது.

சம்பவத்தன்று ஆன்மேரியின் 2 வயது குழந்தையான லெய்லா அப்பகுதியில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

கழிவுநீர் கால்வாய் திறந்திருப்பதை கவனிக்காத குழந்தை லெய்லா அதில் தவறி விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

திடீரென்று குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகாமையில் நின்றிருந்த அவரது பாட்டி திடுக்கிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் குழந்தையின் ஒருபகுதி தலை மட்டும் வெளியே தெரிவதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் குழந்தையின் தலையை தமது இரண்டு கையால் இறுக பற்றிப்பிடித்து மேலே தூக்கியுள்ளார்.

அந்த குடியிருப்பில் அமைந்துள்ள அனைத்து வீட்டின் கழிவுகளும் அந்த கால்வாய் வழியாக வெளியேறுவதாக கூறப்படுகிறது.

குழந்தையை வெளியே எடுத்து காப்பாற்றிய அவர் உடனடியாக மருத்துவமனைக்கு தாயாருடன் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் பெரும்பாலும் அந்த பகுதியில்தான் விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த பகுதியிலேயே அந்த குடியிருப்பின் கட்டுமான நிறுவனம் கழிவு நீர் கால்வாயையும் மூடாமல் விட்டு வைத்துள்ளது.

தமது குழந்தைக்கு ஏற்பட்டது போன்று வேறு குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என தெரிவித்த ஆன்மேரி, அந்த குடியிருப்பின் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

இதனிடையே அந்த நிறுவனத்தினர் உடனடியாக செயல்பட்டு அந்த கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி கால்வாயை மூடியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற சம்பவகங்கள் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்ம் என கட்டுமான நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர்.

SHARE