மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசார்!

300

மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டும், அதற்கு காரணமானவர்களைக் கண்டித்தும் டெல்லியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போலீசார் நடத்திய கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மாணவிகள் என்றும் பாராமல், ஆண் போலீசார் அத்துமீறி கைகளாலும் லத்தியாலும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காட்சிகள், வீடியோவாக சமூக வலைத் தளங்களில் பரவி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 30-ம் தேதி, டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், அனைத்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர், ரோஹித் வேமுலா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டும், கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீசார் மாணவர்கள், மாணவிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போலீசாரோடு சேர்ந்துகொண்டு சமூக விரோதிகளும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

இதனால் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து ரோட்டில் தள்ளி ஆண் போலீசார் தாக்கியது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

போலீசார் மற்றும் சமூக விரோதிகளின் அத்துமீறிய தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில்,”போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. அவர்களைக் கைதுதான் செய்தோம்” என்று கூறப்படுகிறது.

SHARE