பங்களாதேஸில் போர்க்குற்றவாளிகள் 18 பேருக்கு இதுவரை மரண தண்டனை

295

பங்களாதேஸ் நாட்டில் சுதந்திரப் போரின் போது போர்க்குற்றம் செய்ததாக தொடரப்பட்டுள்ள 22 வழக்குகளில் இதுவரை 18 பேர் போர்க்குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பங்களாதேஸ் நாட்டில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப்போர் நடந்த போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அப்பாவி இந்து மக்களை கொடூரமாக கொன்று குவித்தனர்.

அங்கு அப்படி சுமார் 30 இந்துக்களை கொன்று குவித்ததுடன், 450 கடைகளுக்கு தீயும் வைத்ததாக பாகிஸ்தான் துணைப்படையான ரஜாக்கர் பானியின் ஒபைதுல் ஹக் தார் (வயது 66), அதாவுர் ரகுமான் நானி (62) ஆகிய இருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இவர்கள் மீதான வழக்கை டாக்காவில் உள்ள போர்க்குற்ற நீதிமன்றம் விசாரித்து வந்தது. இருவர் மீதும் கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு தரப்பில் 23 பேர் சாட்சிகளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

விசாரணை முடிவில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.

அவர்களை தூக்கில் போட்டோ, துப்பாக்கியால் சுட்டு கொன்றோ தண்டனையை நிறைவேற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்கள் இருவரையும் சேர்த்து வங்காளதேசத்தில் சுதந்திரப் போரின்போது போர்க்குற்றம் செய்ததாக தொடரப்பட்டுள்ள 22 வழக்குகளில் 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE