இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா இலங்கைக்கு விஜயம்

302
பெப்ரவரி 5ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள 9வது இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் கலந்து கொள்ளும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயத்தை  மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு, ஒத்துழைப்பு,தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு,பொருளாதாரம், வர்த்தகம், மின்வலு எரிசக்தி, சமூக,கலாச்சார கல்வி விடயங்கள், மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பம், சுகாதாரம், உள்நாட்டு விமான போக்குவரத்து சுற்றுலாத்துறை, மக்களுக்கு-மக்கள் தொடர்பு, உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழு இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடும் வகையில் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

8வது இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி புது டில்லியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Sushma-Swaraj

SHARE