அகதிகளை நிறுத்த வேண்டும் அல்லது உதவியை நிறுத்த வேண்டும் – ஆப்கானிஸ்தானிடம்  ஜேர்மனி

325
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை நிறுத்தாவிட்டால், நாங்கள் வழங்கும் பாதுகாப்பு உதவிகளை நிறுத்த வேண்டிவரும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.ஆப்கானில் நிலவிரும் உள்நாட்டுப்பேர் காரணமாக அந்நாட்டு மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர், இதில், பாதுகாப்பு உதவிகளை ஜேர்மன் நாடு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கு வருகிறது.

இந்நிலையில், ஜேர்மனின் உள்துறை அமைச்சர் Thomas de Maizière, அதிகரித்து வரும் அகதிகளை நிறுத்த வேண்டும் அல்லது நாங்கள் வழங்கும் உதவிகளை நிறத்த வேண்டும், இவற்றில் ஏதேனும் ஒன்றை நாங்கள் செய்யவேண்டும் என ஆப்கான் அரசிடம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானின் தலைநகரான காபூலுக்கு சென்று பார்வையிட்ட அவர், எவ்வாறு ஆப்கானிஸ்தர்கள் ஜேர்மன் நாட்டிற்கு புகலிடக்கோரிக்கையாளர்களாக வருகிறார்கள்? என்று ஏராளமான ஜேர்மனியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அவர்களை வரவேற்க பணவசதி இல்லை, அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது, ஆனால் இவையெல்லாம் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையிலேயே ஜேர்மன் நாட்டிற்குள் வருகின்றனர்.

எனவே, தங்கள் நாட்டை விட்டு மக்கள் அகதிகளாக குடியேறுவதை ஆப்கான் நாடு தடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

SHARE