போர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்

274
ராணுவத்தில் பணியாற்றி தங்களுக்கு எதிராக போராடிய பத்து வயது சிறுவனை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சிறுவன் வசில் அகமத். இவரது மாமா தாலிபன் இயக்கத்தில் இருந்துள்ளார்.

பின்னர் தனது ஆதரவாளருடன் அரசு படையில் இணைந்து தாலிபன் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் வசில் அகமத்தின் தந்தை உள்ளிட்ட பலர் பலியாகினர். அவரது மாமாவும் காயமடைந்தார்.

இதையடுத்து அவரது படைக்கு தலைமை தாங்கிய அகமத் தாலிபன் தீவிரவாதிகள் எதிராக சிறப்பாக போர் புரிந்துள்ளார்.

இதையடுத்து அவரை போர் கதாநாயகன் என்று ராணுவத்தினர் பாராட்டினர். பின்னர் அகமத் தனது பள்ளி படிப்பை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அகமத்தை தலையில் சுட்டுக்கொன்றுள்ளதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

காய்கறி வாங்குவதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்த அகமத்தின் தலையில் இரண்டு தோட்டாக்களை பிரயோகித்து அவர்கள் கொலை செய்துள்ளனர்.

இது குறித்து ஆப்கன் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தியாளர் ரஃபுல்லா பைடர் கூறியதாவது, போரில் சிறுவர்களை பயன்படுத்துவது தவறு.

ஆனால் ராணுவமும் தீவிரவாதிகளும் தொடர்ந்து அவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் அகமத்தை படையை தலைமை தாங்குவதற்கு அனுமதித்து மாகாண அரசு சட்டத்தை மீறியுள்ளது.

அதேவேளையில் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த பத்து வயது சிறுவனான அகமத்தை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE