தலிபான்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பிய இளவரசர் ஹரி

273
பிரித்தானிய இளவரசர் ஹரி, தலிபான் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார் என்று அவருடைய முன்னால் நண்பர் வெளியிட்டுள்ள புத்தகத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய இராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இளவரசர் ஹரி, 2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில், பிரித்தானிய படைவீரர்களுடன் சேர்ந்து தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான போரில் ஈடுபட்டார்.

அப்போது, Helmand மாகாணத்தில் ஒரு நாள் மாலைநேரத்தில் இவரது நண்பர் Sgt Tom Pal என்பவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தலிபான்களின் ராக்கெட் ஒன்று ஹரி மீது மோதும் விதமாக வந்துள்ளது.

ஆனால், உடல்கவசம் மற்றும் தலையில் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

மேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும், Coldstream Guards என்ற புத்தகத்தில் வெளியாகியுள்ளன, அந்த புத்தகத்தில் ஹரியின் ராணுவ வாழ்க்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது உள்ளிட்ட தகவல்கள் அடங்கியுள்ளன.

ஹரி குறித்து அவரது நண்பர் மேலும் கூறியதாவது, இளவரசர் ஹரி இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற முடிவு கடினமானது இருந்தது, ஆனால் தனது வாழ்க்கையில் ஒரு பணியை முடித்துவிட்டு புது அத்தியாயத்தை தொடங்குவதற்கான நேரம் என்பதால் அவர் ஓய்வு பெற்றார் என்று கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில் அதிகாரிப் பயிற்சி வீரராகச் சேர்ந்த ஹரி, 2006 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினருடன் சேர்ந்து பயங்கரவாதிகளுடன் போரிட்டார்.

இராணுவத்தின் விமானப் பிரிவில் சேருவதற்காக 2009 இல் பயிற்சி மேற்கொண்டார். 2012 ஆம் ஆண்டில் போர்க்கள ஹெலிகொப்டர் விமானியாகச் செயற்படத் தொடங்கினார். அதேயாண்டு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.

அன்பின்னர், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிய அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு யூன் மாதம் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE