மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்

296
திருமண பந்தத்தில் இணைந்தவுடன் வாழ்க்கை நடத்துவதற்கு அன்பும், விட்டுக்கொடுத்தலும் போதாது, அதிகம் பணம் தான் தேவை என நினைக்கும் கணவன்மார்களால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் ஏராளம்.வரதட்சணை கொடுமை என்ற பெயரில், அடி உதை முதல் ஆசிட் வீச்சு வரை கொடுமையான தண்டனைகளை பெண்கள் அனுபவிக்கின்றனர்.

வங்கதேசத்தை சேர்ந்த Jesmin Akter (23) என்ற பெண்மணியிடம் அவரது கணவர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து பிரச்சனை செய்துள்ளார், இதன் உச்சக்கட்டமாக ஆசிட்டை தனது மனைவி மீது ஊற்றியுள்ளார்.

இதனால் கடுமையான தீக்காயங்கள் ஆளான அவர், Dhaka மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இதில் அவரது முகத்தில் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நெய்யப்பட்ட துணியால் உடலை பாதுகாத்துள்ள மருத்துவர்கள், அதிக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் உடலை தொட முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, Acid Survivors Foundation வெளியிட்டுள்ள தகவலில், 1999 முதல் 2015 வரை, 3626 ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளன, இதில் 1847 பேர் பெண்கள், 901 பேர் ஆண்கள், 877 பேர் குழந்தைகள் ஆவர்.

சில குற்றவாளிகள், குறைந்த செலவு ஆனால் கொடூரமான தாக்குதல் என்ற காரணத்தினாலேயே ஆசிட்டினை பயன்படுத்துகிறார்கள்.

ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு பயங்கர காயங்களை சந்திக்கும் சிலர்களது வாழ்க்கையே மாறிவிடுகிறது என்று கூறியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வரதட்சணை பிரச்சனைகள் அதிகரித்துள்ளன, அதில், 1,847 பெண்கள் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ளனர், 301 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று வங்கதேசத்தின் தேசிய வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE