அமெரிக்க அதிபர் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார் – தேர்தல் நடைமுறை குறித்த பார்வை

286

உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்காவில், 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி புதிய அதிபர் பொறுப்பேற்கப் போகிறார். இந்த அதிபர் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார் என்பதைப் பார்க்கலாம்.

பூமியின் மிகப்பெரிய ராணுவத்தின் தலைவர், உலகின் எந்தப் பகுதியிலும் நேரடியாகவோ, மறைமுகமாக அதிகாரம் கொண்டவர் அமெரிக்காவின் அதிபர். இந்தப் பதவிக்குப் போட்டியிட வேண்டுமெனில் அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் நாட்டில் வசித்திருக்க வேண்டும். சட்டப்பூர்வமான தகுதிகள் இவை மட்டுமே. ஆனால், நடப்பில் வேறு சில தகுதிகளும் தேவைப்படுகின்றன. கடந்த 90 ஆண்டுகளில் ஆளுநர், செனட் அவை உறுப்பினர், அல்லது ராணுவத் தளபதி என உயர் பதவிகளை வகித்தவர்கள் மட்டுமே அதிபர்களாக முடிந்திருக்கிறது.

இந்த ஆண்டு நடக்கப் போகும் தேர்தலுக்கான களத்தையும் 10 ஆளுநர்கள், 10 செனட் உறுப்பினர்கள் என அதிகார வர்க்கமே ஆக்கிரமித்திருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நடைமுறைப்படி குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் மட்டுமே அதிபராக முடியும். இந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையானது தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவிப்பதால், அவர்களில் யார் போட்டியிடுவது என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடக்கின்றன. சுமார் 40 ஆண்டுகளாக அயோவா மாநிலத்திலேயே இந்தத் தேர்தல்கள் தொடங்குகின்றன.

இரண்டாவதாக நியூ ஹம்ஷயர் மாநிலத்தில் தேர்தல்கள் நடக்கின்றன. அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்து விட்டதால், இந்த ஆண்டு நடக்கும் தேர்தலில் அவர் போட்டியிட முடியாது. தற்போதைய நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளின்டனும், வெர்மான்ட் மாநில ஆளுநர் பெர்னி சான்டர்ஸும் களத்தில் முதன்மையாக இருக்கின்றனர். குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான போட்டியில் 10-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொலைக்காட்சி பிரபலம் டொனால்ட் ட்ரம்ப், டெக்ஸாஸ் செனட்டர் டெட் க்ரூஸ், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ் உள்ளிட்டோர் இவர்களில் அடங்குவார்கள். ஒரு கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே அதிபருக்கான தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள். அதனால் இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் தற்போது களைகட்டியிருக்கின்றன.

us_president_election_2016__large

SHARE