அமெரிக்காவிலும் தேசிய கீதம் தமிழில்

322
இலங்கையின் 68வது தேசிய தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய தின நிகழ்விலும் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.

இதற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், கொழும்பில் மட்டுமல்லாது வாஷிங்டனிலும் இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்திலும் தமிழிலும் பாடப்படடதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நிஷா பிஸ்வாலின் கருத்து, அவரது டுவிட்டார் பக்கத்தில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

SHARE