இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் ரணிலுடனான சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட தூதுக் குழுவினரும், இந்திய தூதுக் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இருநாட்டு உறவுகள், மீனவப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.