தீவிரவாதி வெடிகுண்டு தாக்குதலால் விமானத்தில் ஓட்டை விழுந்தது: சோமாலியா அதிகாரிகள் தகவல்

293
தீவிரவாதி வெடிகுண்டு தாக்குதலால் விமானத்தில் ஓட்டை விழுந்தது: சோமாலியா அதிகாரிகள் தகவல்

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் இருந்து செர்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதனால் விமானத்தின் இருக்கை பகுதியில் பெரிய அளவில் ஓட்டை விழுந்தது. அதை தொடர்ந்து விமானி சாமர்த்தியமாக விமானத்தை மீண்டும் மொகாடிசுவில் தரை இறக்கினார்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

விண்ணில் பறந்த போது விமானத்தில் ஓட்டை ஏற்பட்டது. குறித்து சோமாலியா விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது.

அதில் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் விமானத்தில் ஓட்டை விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி தனது லேப்டாப்பில் குண்டை மறைத்து எடுத்துச் சென்று புறப்பட்டதும் வெடிக்க செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சோமாலியாவில் அல்– ஹபாப் தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

SHARE