பாலியல் வழக்கில் இருந்து தப்ப இழப்பீடு வழங்கிய இளைஞர்கள்

260
குரோஷியா நாட்டில் பாலியல் வழக்கில் சிக்கிய இளைஞர்கள் இழப்பீடு தொகை வழங்கி தண்டனையில் இருந்து தப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குரோஷியா நாட்டில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு அவுஸ்திரேலிய இளைஞர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர்.

அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் மது அருந்திக்கொண்டு இருந்தபோது நார்வே நாட்டவரான 17 வயது இளம்பெண் ஒருவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது போதையில் இருந்த மூன்று பேரில் ஒரு இளைஞர் அவரை வலுக்கட்டாயமாக ஆண்களுக்கான கழிவறையில் கூட்டிச்சென்று கற்பழித்துள்ளார்.

தொடர்ந்து அந்த இளைஞரின் நண்பர்கள் இருவரும் அங்கு வந்து அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளனர்.

இதனிடையே அவர்களிடம் இருந்து தப்பிய அந்த இளம்பெண் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், மரபணு சோதனை நடத்தியதியதை அடுத்து அவுஸ்திரேலிய இளைஞர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கில் இளைஞர்கள் மூன்று பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்.

இந்நிலையில் குற்றவாளிகள் சார்பாக நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்கள் இருவரும் இழப்பீடு வழங்குவது குறித்து கலந்தாலோசித்துள்ளனர்.

அதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 20,000 யூரோ வழங்க 3 இளைஞர்களும் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைடையே இந்த முடிவுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரும் சமூக ஆர்வலர்களும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

SHARE