16 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்

269
பிரித்தானியாவில் மாயமான இளைஞர் ஒருவர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தமது குடும்பத்துடன் இணையவிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1999 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள உறவினர் ஒருவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து Jason Ronald குடும்பத்தினர் வந்துள்ளனர்.

ஈமச்சடங்குகள் முடிவடைந்த நிலையில் ஜாசன் குடும்பத்தினர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் ஜாசன் மட்டும் பிரித்தானியாவில் தங்கியதாக கூறப்படுகிறது.

நண்பர் ஒருவருடன் தங்கிய ஜாசன் அவருடன் ஏற்பட்ட மனவருத்தத்தினால் அங்கிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து ஜாசனை உறவினர்களோ நண்பர்களோ எவரும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே மாயமான தமது மகனை பல இடங்களிலும் தேடியதாகவும் அவரை கண்டுபிடுக்க முடியவில்லை என பொலிசார் கூறியதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்றவர்களுக்கான உறைவிடத்தில் தங்கியிருப்பதை பொலிசார் கண்டு பிடித்துள்ளனர்.

நண்பரின் வீட்டில் இருந்து துரத்திய பின்னர் தமது அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு அனைத்தும் தொலைந்ததால் அரசு உதவி எதுவும் கிடைக்கபெறவில்லை எனவும்,

முதல் 10 ஆண்டுகள் மிக கடுமையானதாகவும், உணவுக்காக திருட்டு மற்றும் பிச்சை எடுத்துள்ளதாகவும் ஜாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜாசன் அவிஸ்திரேலியா திரும்பும் பொருட்டு அவருக்கு தேவையான அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை பெற்று அவரது பெற்றோர் போதிய பணத்துடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அடுத்த சில தினங்களில் அந்த அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு கிடைக்கபெற்றதும் 16 ஆண்டுகளுக்கு பின்னர் ஜாசன் அவுஸ்திரேலியா செல்ல உள்ளார்.

SHARE