1,075 யூதர்களை கொடூரமாக எரித்து கொன்ற வழக்கில் 93 வயதான முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்

284
இரண்டாம் உலகப்போரின்போது சுமார் 1,075 யூதர்களை எரித்து கொலை செய்யப்பட்டதற்கு துணையாக இருந்த 93 வயதான முன்னாள் பாதுகாவலர் ஒருவர் ஜேர்மன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த 1940 முதல் 1945 காலக்கட்டத்தில் ஜேர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் நாசிச படைகள் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொன்று குவித்தனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் யூதர்கள் ஆவர்.

நாசிச படைகளால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை அடைத்து வைக்க போலந்து நாட்டில் Auschwitz-Birkenau என்ற சித்ரவதை முகாம் கட்டப்பட்டது.

இந்த முகாமின் பாதுகாவலாராக பெயர் வெளிடப்படாத நபர் ஒருவர் 1942ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி முதல் 1943ம் ஆண்டு யூன் 25ம் திகதி வரை பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இதே காலக்கட்டத்தில் ஜேர்மனியின் பெர்லின் நகரிலிருந்தும், பிரான்ஸின் ட்ரான்ஸி நகரிலிருந்தும் மற்றும் நெதர்லாந்தின் வெஸ்டர்போர்க் நகரிலிருந்து 3 ரயில்களில் கைதிகள் போலந்தில் உள்ள சித்ரவதை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த முகாமின் பாதுகாவலாராக இருந்த அந்த நபரின் தலைமையில் 1,075 கைதிகளை எரிவாயு நிரப்பிய அறையில் பூட்டி எரித்துக்கொன்றுள்ளனர்.

இந்த வழக்கு தான் தற்போது ஜேர்மன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 93 வயதை எட்டியுள்ள அந்த முன்னாள் பாதுகாவலரின் உடல் ஆரோக்கியமாக இருப்பதால், அவர் நீதிமன்றத்திற்கு வரலாம் என மருத்துவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தினமும் 4 மணி நேர விசாரணை அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE