தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வாங்குவது சுவிஸ் மக்களிடையே அதிகரிப்பு: நன்மையா? தீமையா?

288

 

தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வாங்குவது சுவிஸ் மக்களிடையே அதிகரிப்பு: நன்மையா? தீமையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் தற்காப்பிற்காக கை துப்பாக்கிகளை சட்டரீதியாக விலைக்கு வாங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்பார்த்ததை விட துப்பாக்கிகளை வாங்கி குவிக்கும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சுவிஸில் உள்ள 26 மாகாணங்கள் மத்தில் 12 மாகாணங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் கடந்த ஆண்டை விட துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள உரிமம் வாங்குவதற்கு விண்ணப்பம் செய்துள்ள பொதுமக்களின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வாட்(Vaud) மாகாணத்தில் மட்டும் 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2014ம் ஆண்டு கைதுப்பாக்கி உரிமத்திற்காக விண்ணப்பம் செய்தவர்கள் 2,427 என்ற எண்ணிக்கையில் இருந்து 2015ம் ஆண்டு 4,200 என்ற எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வாட் மாகாணத்தின் குற்றங்கள் தடுப்பு அதிகாரியான Pierre-Olivier Gaudard என்பவர் பேசியபோது, ’சுவிஸ் நாட்டிற்குள் சட்டவிரோத கும்பல் நுழைந்துவிடுவதால் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்களிடையே துப்பாக்கிகள் வாங்குவது அவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.

ஆனால், சுவிஸ் குற்றங்கள் தடுப்பு துறை அதிகாரியான Martin Boess என்பவர் பேசுகையில், ‘துப்பாக்கிகள் அதிகமாக புழக்கத்தில் இருந்தால் அதனால் சமூகத்திற்கு தான் ஆபத்து.

சுவிட்சர்லாந்து இன்னொரு அமெரிக்காவாக மாறிவிடக்கூடாது. துப்பாக்கிகள் அதிகம் பேர் வாங்குவதால், குற்றங்கள் மற்றும் விபத்துக்களும் அதிகம் நடைபெறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிஸில் உள்ள 80 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 20 லட்சத்து 50 ஆயிரம் துப்பாக்கிகள் முறையாக உரிமம் பெற்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 50 சதவிகிதம் ராணுவம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு துறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE