கஞ்சா செடிகளை விற்பனை செய்து வரும் கன்னியாஸ்திரிகள்

263
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் Marijuana வளர்த்து விற்பனை செய்வதில் பிரபலமடைந்துள்ளனர்.கலிபோர்னியாவில் Kate மற்றும் Darcy ஆகிய இரண்டு கன்னியாஸ்திரிகள் வலி நிவாரணியாக வாடிக்கையாளர்களுக்கு Marijuana விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது இருப்பிடத்தை சுற்றியுள்ள பகுதியிலேயே Marijuana செடிகளை பயிரிட்டு வளர்த்து விற்பனை சென்கின்றனர்.

தற்போது கலிபோர்னியாவில் விற்பனைக்கு அதிக கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளதால் கன்னியாஸ்திரிகளின் விற்பனைக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கன்னியாஸ்திரிகள் விற்பனை செய்து வரும் Marijuana மிக சிறந்த வலி நிவாரிணி என வாடிக்கையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

இவர்கள் தயாரித்து வழங்குவதால் அதில் அதிக போதை ஏற்படுவதில்லை எனவும் மருத்துவ ரீதியாக மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட இந்த விற்பனை நிலையம் தற்போது அதிக விற்பனையாகும் பொருட்களின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் Marijuana-வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தற்போது கன்னியாஸ்திரிகள் இருவரும் போராடி வருகின்றனர்.

வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதால் தமது பொருட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க தற்போது கன்னியாஸ்திரிகள் முடிவு செய்துள்ளனர்.

SHARE