பேஸ்புக்கிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்

234
உலகிலேயே காணப்படும் இணையத்தளங்களில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இரண்டாவது இணையத்தளமாக பேஸ்புக் சமூகவலைளத்தளம் காணப்படுகின்றது. இவ்வாறான பேஸ்புக் நிறுவனத்திற்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.அதாவது பேஸ்புக் இணையத்தளத்திற்கு விஜயம் செய்த போதிலும் அதில் கணக்கு வைத்திருக்காதவர்கள் அல்லது பேஸ்புக் தளத்தினுள் லாக்கின் செய்யாதவர்களையும் பேஸ்புக் நிறுவனம் இரகசியமாக கண்காணித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அவ்வாறு பேஸ்புக் நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்காத பயனர்களை கண்காணிப்பதை உடனடியாக நிறுவத்துமாறு பிரான்ஸ் நாட்டின் தரவு பாதுகாப்பு அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

இதனால் பேஸ்புக் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதேவேளை பிரான்ஸ் நாட்டிலிருந்து 30 மில்லியன் பயனர்கள் பேஸ்புக் சேவையினை பயன்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE