காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்

242
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் வருங்கால மனைவிக்காக தனது சிறுநீரகத்தை ஒன்றை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் சாஸ்கடூன் நகரை சேர்ந்தவர்கள் கிரிஸ்டியன் வில்லென்பொர்க் (Christian Willenborg) மற்றும் எரீன் டொலெஃப்சன் (Errin Tollefson).

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இந்நிலையில், தான் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்ததாகவும், தற்போது மற்றொரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக எரீன் தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்வதற்கு தயாராக இருந்த ஒருவரும் நோய் காரணமாக இறந்துவிட்டார்.

இதனால் தினமும் 9 மணி நேரம் எரீனுக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தனது காதலியின் நிலை கண்டு மன வேதனையடைந்த கிரிஸ்டியன் தனது சிறுநீரகத்தில் ஒன்றை அவருக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளார். தற்போது எரீன் சிசிச்சையில் முடிந்து குணமடைந்து வருகிறார்.

இது குறித்து கிரிஸ்டின் கூறுகையில், உங்களின் நேசத்துக்குரியவர்களின் கண்களில் மரணத்தையோ அல்லது பயத்தையோ பார்த்தால் அதனை சரி செய்வதற்கு நீங்கள் கட்டாயம் செயல்பட்டாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE