நாட்டை விட்டு வெளியேறிய பெண் ஊடகவியலாளர்

260
ஈரான் நாட்டில் செய்தி ஊடகத்தில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர், மேலதிகாரியின் பாலியல் துன்புறுத்தலை அடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.ஈரான் நாட்டில் பிரபலமான செய்தி ஊடகம் ஒன்றில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்தவர் 32 வயதான ஷீனா ஷிரானி.

ஒரு குழந்தைக்கு தாயான இவர் கணவரை பிரிந்து குடும்பத்துடன் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் பணியாற்றும் ஊடகத்தில் செய்திப்பிரிவின் மேலதிகாரியாக ஹமித் எமாதி என்பவர் இருந்து வருகிறார்.

இவர் தொடர்ந்து ஷீனாவை பாலியல் ரீதியாக துன்புறித்தி வந்ததாகவும் தொலைப்பேசியில் ஆபாசமாக பேசி நச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தில் மேலும் பணிபுரிவதில் தமக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த ஷீனா, பணியில் இருந்து விலகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தமது நிலையை விளக்கும் பொருட்டு தாம் அந்த நபருக்கு எதிராக சேகரித்த அனைத்து தகவல்களையும் சமூக ஊடகம் வழியாக வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த நபர் தொடர்ந்து தொல்லை தந்து வருவதால் தமது குழந்தையுடன் ஈரான் நாட்டில் இருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து அறிந்துகொண்ட சம்பந்தப்பட்ட செய்தி ஊடகம் குறிப்பிட்ட நபரையும் அவரது உதவியாளரையும் நிறுவனத்தில் இருந்து நீக்கியுள்ளது.

மேலும் ஷீனா வெளியிட்டுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரித்த பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

SHARE