பிரித்தானியாவை புரட்டிப்போட்ட புயலில் சிக்கிய கப்பல்

287
கடந்த மாதம் பிரித்தானியாவை புரட்டிப்போட்ட Gertrude புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் வீடியோ பதிவு அச்சுறுத்தும்படி உள்ளது.பிரித்தானியாவில் கடந்த மாதம் வீசிய Gertrude புயலால் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 144 மீற்றர் வேகத்தில் காற்று வீசியது.

அதேப்போன்று கடல் அலைகள் 60 அடிக்கு மேல் உயரத்தில் வந்து கரையை தாக்கியது மட்டுமின்றி கரைப்பகுதியிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றது.

இந்நிலையில் அந்த புயலில் சிக்கிய கப்பல் ஒன்றின் போராட்டத்தை அதன் ஊழியர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ பதிவு பார்வையாளர்களை அச்சத்தில் தள்ளும் வகையில் உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

இந்த கப்பலானது அவசர தேவைகளுக்கும் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொருட்டும் பயன்படுத்தப்படுவதாகும்.

கப்பலின் முக்கிய பணியாக கருதப்படுவது, கடலுக்குள் அமைந்துள்ள எண்ணெய்க்கிணறுகளில் பணிபுரியும் ஊழியர்களை கண்காணித்து உதவுவதே.

SHARE