சமந்தா-சூர்யா போட்டோவுக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் எதிர்ப்பு 

463
சமந்தாவுடன் மகேஷ்பாபு ரசிகர்கள் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு, பீச்சில் நடக்கும்போது அவரை பின்தொடர்ந்து கையையும், காலையும் ஊன்றி பட ஹீரோயின் வருவதுபோல் நேனொக்கடெய்ன் என்ற படத்துக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் ஆந்திராவில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்துவதுபோல் காட்சி இருப்பதாக குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதை கண்டு கோபம் அடைந்த மகேஷ்பாபு ரசிகர்கள் சமந்தா, சித்தார்த் இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து இணைய தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தனர். வாரக்கணக்கில் நடந்த இந்த மோதல் பின்னர் சூடு குறைந்தது. தற்போது இது மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. பீச்சில் படுத்திருக்கும் சமந்தாவின் காலை சூர்யா தடவுவதுபோல் அஞ்சான் படத்தின் ஸ்டில் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்த மகேஷ்பாபு ரசிகர்கள் தற்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஒரு நடிகையின் காலை ஒரு ஆண் பிடிப்பதுபோல் போஸ் கொடுத்திருப்பது எப்படி ஏற்க முடியும்? என்று சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

SHARE