கடவுளின் பெயரைக் கூறி 39 மனைவிகளுடன் வாழும் மனிதர்…. 94 குழந்தைகள் 33 பேரக்குழந்தைகளாம்!….
ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவோர் பலர். இத்தகையோருக்கு மத்தியில், மிசோரம் மாநிலம்,
இருபது படுக்கை அறை கொண்ட அரண்மனை போன்ற வீட்டில் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் இந்த அதிசய மனிதர்.
இவர் தந்தை சனா பல திருமணங்கள் செய்ததால் கிறிஸ்தவ சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். உடனே அவர் ‘சனாபால்’ என்றொரு புதிய கிறிஸ்தவ அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவரானார்.
அத்துடன் ‘இந்த சபையில் சேருவோர் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்’ என அறிவித்தார்.
தந்தையின் மறைவுக்கு பின், இந்த அமைப்புக்கு, தலைவர் ஆனார் சயோணா. இவர், 17 வயதில் முதல் திருமணம் செய்த போது, மனைவியின் வயது இருபது. ஒரே ஆண்டில், பத்து திருமணங்கள் செய்து இருக்கிறார்.
மேலும் பல திருமணங்களை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். ‘கடவுளுக்காகத் தான் இத்தனை திருமணங்களை செய்துள்ளேன்’ என்று கடவுள் மீது பாரத்தை போடுகிறார் சயோனா.