சிரி­யா­வி­லி­ருந்து படை­களை வாபஸ் பெற ரஷ்ய ஜனா­தி­பதி அதி­ரடி உத்­த­ரவு..!!

299

 

1021765670 copyரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் சிரி­யா­விலிருந்து தனது நாட்டுப் படை­யி­னரை வாபஸ் பெற அதி­ரடி உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

இதன் பிர­காரம் முத­லா­வது தொகுதி ரஷ்ய படை­யணி சிரி­யா­வி­லுள்ள ரஷ்ய ஹமெ­யிமிம் படைத்­த­ளத்­தி­லி­ருந்து செவ்­வாய்க்­கி­ழமை தாய்­நாட்­டுக்குப் புறப்­பட்­டது.

சிரி­யா­வி­லான ரஷ்ய தலை­யீட்­டிற்­கான நோக்­கங்கள் பெரு­ம­ளவில் எட்­டப்­பட்­ட­தை­ய­டுத்தே அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக விளா­டிமிர் புட்டின் கூறினார்.

இந்­நி­லையில் சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அஸாத் ரஷ்­யாவின் மேற்­படி நகர்­வுக்கு இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக அவரது அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.

ரஷ்­யா­வா­னது சிரி­யாவில் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து வான் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

மேற்­படி தாக்­கு­தல்­க­ளா­னது அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளையும் ஏனைய தீவி­ர­வாதக் குழுக்­க­ளையும் இலக்­காகக் கொண்­டது என ரஷ்யா வலி­யு­றுத்தி வந்த நிலையில், அந்தத் தாக்­கு­தல்கள் அந்­நாட்டு ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் அவருக்கு எதிராக செயற்பட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருவதாக ஏனைய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

SHARE