இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் காதல் சைக்கோ கதையாக உருவாகிறது அழகன் முருகன். புது இயக்குனர் மூனா டைரக்ஷன். படம்பற்றி அவர் கூறும்போது,காதலில் தோற்றவர்கள் மிருகத்தனம் கொண்ட சைக்கோவாகி விடுவது உண்டு. அதுபோல் மாறும் ஒரு இளைஞனின் மனதுக்கு உருவம் கொடுத்து அது நடமாடினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை திரைக்கதையாக அமைத்திருக்கிறேன். சசி கார்த்திக், மனோ முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆந்திராவை சேர்ந்த சவுமியா, கேரளாவை சேர்ந்த டிண்டு என 2 ஹீரோயின்களுடன் இமான் அண்ணாச்சி, சங்கர், தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை சதீஷ்குமார். பின்னணி இசை சங்கர் ரங்கராஜன். ஒளிப்பதிவு வெற்றி. செல்லாத்தாள் பிலிம்ஸ் தயாரிப்பு என்றார்.