ஐ.நா. மனித உரிமைச் சபை – 31ஆவது கூட்டத் தொடர் ச. வி. கிருபாகரன்

300

 

meetng_un_012ஜெனிவாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் .நா. மனித உரிமைச்சபையின் 31ஆவது கூட்டத் தொடரில், சிறிலங்காவின்விடயங்கள்முக்கியத்துவம் பெறாத பொழுதிலும, சிறிலங்காவின்வேறுபட்ட விடயங்களை ராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள், அரசசார்பற்றநிறுவனங்களின் கூட்டங்கள் மூலம் வலியுறுத்தப் படுகின்றது.

ஜெனவாவில் .நா. மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர்நடைபெற்று வரும் இவ் வேளையில்> சிரியா நாட்டின் சர்ச்சைகள்பற்றியபேச்சுகளை அரேபிய நாடுகளும் ஐ.நா. பிரதிநிதிகளும் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அரச சார்பற்ற கூட்டங்களின் வரிசையில், கடந்த 15.03.2016செவ்வாய்க்கிழமைசுயநிர்ணய உரிமைஎன்ற அடிப்படையில், தமிழ் மக்களின்அரசியல்உரிமைக்காக சர்வதேசத்தில் நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் சுவீடன் நாட்டைச் சார்ந்தபேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழீழ மக்களுடையசுயநிர்ணய உரிமை மட்டுமல்லாது தென் ஜெமன், குருதிஸ்தான், சாகரவீ (மேற்கு சாகராவீ)மக்கள்பற்றிய விடயங்களும் உரையாடப்பட்டது.

தமிழர்களது சுயநிர்ணயம் பற்றி நோர்வே நாட்டை சார்ந்த சட்டத்தரணி திரு சிவபாலன், பிரான்ஸ்நாட்டை சார்ந்த திருச்சோதி ஆகியோர்உரையாற்றினர்இக்கூட்டத்தில் சிவபாலன் கூறியதாவது,பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஏறக்குறைய எழுபதுவழக்குகளைதான்  வழக்கடியுள்ளதாகவும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் வழக்குகள் எந்தவிதஅர்த்தமற்றவையெனவும்,இச்சட்டத்தை சிறிலங்கா வாபஸ் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை (16.03.2016) இரு கூட்டங்களும் வியாழக்கிழமை (17.03.2016)ஒரு கூட்டமும் சிறிலங்கா விடயத்தில்.நா. மண்டபத்தில் நடைபெற்றுள்ளன. கடந்த புதன்கிழமைநடைபெற்ற கூட்டங்களில் ஒன்றை ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும்பயமுறுத்தப்படும்மக்களிற்கான எதிரான அமைப்புநடத்தியிருந்தது.

இக்கூட்டத்தை பிரித்தானிய பிரஜையும், தொழிற்கட்சி சார்பாக பாராளுமன்றத் தேர்தலில்போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம் தலைமைதாங்கிநடத்தினார். இதில் சிறிலங்காவிலும்சர்வதேசத்திலும் பெண் உரிமைக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் திருமதி. நளினிரட்ணராஜா,திரு. மைக்கல் அத்துடன் சிறிலங்காவிற்கு மிக அண்மையில் விஜயம் செய்த சுவிஸ்நாட்டின் பிரஜையான திரு இவ் போலி ஆகியோர்உரையாற்றினர்.

திருமதி நளினி கூறியதாவது, சிறிலங்காவில் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சி கூறுபவர்களிற்குமானபாதுகாப்புச் சட்டம் உடனடியாகநடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், சிறிலங்காவின் பொலிஸ்,இராணுவம் ஆகியவை மறுசீரமைக்கப்பட வேண்டுமெனவும் இவைநடைபெறாத கட்டத்தில் மக்கள்சிறிலங்காவின் பொறுப்பு கூறுதலில் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் எனவும் கூறியிருந்தார்.இக்கூட்டத்தில்உரையாற்றிய மைக்கல் அவர்கள் சிறிலங்கா அரசினால் பாதிக்கப்பட்டவர்களில்தானும் ஒருவரெனவும், சிறிலங்காவின் உள்நாட்டுவிசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு நீதிகிடைக்கப் போவதில்லையெனவும், சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினரின்தொல்லைகள்உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் எதிர் கொள்வதாகவும்கூறினார்.

திரு இவ் போலி தனது உரையில், தான் சில மாதங்களுக்கு முன்பு சிறிலங்கா சென்றிருந்ததாகவும்,அங்கு சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினர்மக்களை தன்னைச் சந்திக்க வேண்டாமெனவேண்டியதாகவும,; சிறிலங்காவின் நிலைமைகள் சிறிலங்கா அரசு சர்வதேச சமூதாயத்திற்குபுகழ்வதுபோல் முன்னேற்றம் அடையவில்லை என குறிப்பிட்டார். கடந்த புதன்கிழமை மாலைநடைபெற்ற மற்றைய கூட்டத்தில், சட்டத்தரணி திரு.சிவபாலன், வடமாகாண சபை உறுப்பினர்திருமதி சசிதரன் ஆகியோர் உரையாற்றினர்.

இவற்றை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இனத்துவேசங்களிற்கு எதிரான அரச சார்பற்றநிறுவனமானஈமடா”;(IMADR) “Transitional Justiceஎன்றதலையங்கத்தில் ஒரு கூட்டத்தை, இதன் தலைவியான திருமதி. நிமல்காபெர்னான்டோதலைமையில் நடைபெற்றது. இவ் கூட்டத்தில் உண்மைகளை பிரதிபலிக்கும் ஓர்ஆவண படம் திரையிடப்பட்டது.

சிறிலங்காவிலிருந்து வருகை தந்துள்ள திருமதி நிமல்கா, திருமதி நளினி ஆகியோர் சிறிலங்காவின்நிலைப்பாடுகள் பற்றிக்கலந்துரையாடினர்கள். இவர்கள் தமது உரையில் சிறிலங்கா சம்மதித்துஏற்றுக்கொண்ட கலப்பு நீதிமன்றம் போன்ற விசாரணையை எப்படிநடைமுறைப்படுத்த முடியுமெனப்பார்வையாளர்களிற்கு எடுத்துரைத்தார்கள்

31ஆவது கூட்டத் தொடர், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும் சிறிலங்கா பற்றியவிடயங்கள் மேலும் இடம்பெறுவதற்கானசாத்தியக் கூறுகள் குறைந்தே காணப்படுகின்றன.

எதிர்வரும் 32ஆவது கூட்டத் தொடர்> யூன் மாதம் நடைபெறவுள்ளதுடன், சிறிலங்கா விடயம் இக்கூட்டத் தொடரில் நிட்சயம் ஆராயப்படவுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கதுmeetng_un_012

SHARE