பதவிக்காக கொழும்பில் நாக்கு வழிக்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

292

 

2901_1456850572_tnaகேவலம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமைப் பதவிக்காகவும் கொழும்புக்குச் சென்று நாக்கு வழித்துத் திரிவதாக அரசாங்கத்தின் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

தமிழினத்திற்கு எப்படியான அவமானம் வரக்கூடாது என தமிழர்கள் போராடினார்களோ எந்த தன்மானத்தை இழக்கக்கூடாது என இலட்சக்கணக்காண உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்தார்களோ அந்த அவமானத்தையும் தன்மானத்தையும் தமிழர்கள் மீண்டும் இன்று மட்டக்களப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மகாணசபை அமைச்சர்களினாலும் இழந்திருக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கண்டு பயந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சோரம்போகாத தன்மையை பாராட்டியவர்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை கேவலமாக பேசுகின்ற நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் உள்ளதா? என கேட்கத்தோன்றுகின்றது.

மிகவும் வெளிப்படையாகவே தெட்டத்தெளிவாக அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதவிக்காக கொழும்பில் நாக்கு வழிக்கின்றது என்று கூறியுள்ளார். அதனை பார்த்துவிட்டு இன்று வரை அது குறித்து மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வாய்திறக்காமல் உள்ளார்கள் என்றால்அமைச்சரின் கருத்து உண்மையானதா? அல்லது அமைச்சரின் கருத்துக்கு பதிலளிப்பதற்கு இங்குள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படுகின்றார்களா? என்பது தெரியாமல் உள்ளது.

இன்று மட்டக்களப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்து பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அலைந்து திரிகின்றனர் என்பதையே அமைச்சர் அவர்களின் கருத்து வெளிப்படுத்தியுள்ளது.

உண்மையில் தமிழ் மக்களிடம் “நாங்கள் எதற்காகவும் தமிழர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம”; என்று கூறிவெற்றிபெற்றவர்கள் இன்று அதற்கு மாறாக நடப்பது வேதனையே.
யார் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்?

மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு சென்று தங்களது பதவிகளுக்காகவும் தங்களை சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காகவும் தங்களை சேர்ந்தவர்களுக்கு இடமாற்றங்களை பெற்றுக்கொடுப்பதற்காக அங்குள்ள அமைச்சர்களிடம் கெஞ்சித்திரியும் நாக்கு வழித்துதிரியும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்? என்பதே இன்று மட்டக்களப்பில் உள்ள மக்களின் கேள்வியாகவுள்ளது.
யாருக்கு வாக்களித்து நாங்கள் எங்களது தன்மானத்தையும் உரிமையையும் இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதை மட்டக்களப்பு தமிழர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் நிச்சயம் அவர்களை பற்றிய செய்திகள் வெகுவிரைவில் வெளிவரும் என்பதே உண்மை.

மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் அரசில் இன்று சோரம்போன அரசியலாக மாறியுள்ளதையே அமைச்சர் அவர்களின் கருத்து எடுத்துக்காட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் அடிமைப்படுத்த முடியாமல் போன தமிழ் தேசியக் கூட்டமைப்பை மைத்திரி அரசு அடிமைப்படுத்தி விட்டது என்பதே உண்மை.

மதில் மேல் பூனையாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணத்தில் அமைச்சுப்பதவிகளையும் மத்தியில் அபிவிருத்திக் குழு பதவிகளையும் கெஞ்சிப் பெறுவது என்பது மிகக்கேவலமான விடயம் ஒன்றில் முழுமையான அதிகாரங்களை அரசுடன் இணைந்து பெற்றுக்கொண்டு மக்களுக்காக சேவையாற்றவேண்டும் இல்லையெனில் முழுமையான அதிகாரம் கிடைக்கும்வரை விளகிநின்று குரல்கொடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று பெறப்பட்டுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழு பதவியாலும் பிரதேச அபிவிருத்திக் குழு பதவியாலும் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

பெரும்பான்மையாகவுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் கேவலம் ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு கூட தலைமை தாங்க முடியாது என்றால் அந்தப் பதவியை பெயருக்கு பெற்றுக்கொண்டு கதிரைகளை நிறுப்புவதால் தமிழர்களின் தன்மானத்திற்கே இழுக்கு ஏற்பட்டுள்ளது.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட சலுகைகளுக்காக தமிழினத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் உட்பட ஒட்டுமொத்த தழிழினமே இன்று ஒரு அமைச்சரின் கேவலமான வார்த்தைகளால் தலைகுணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

தமிழர்கள் தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே உங்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக கொழும்பிற்கு அனுப்பினார்களே தவிர சலுகைகளை பெறுவதற்காக அல்லமட்டக்களப்பில் உள்ள அனைத்து பதவிகளையும் பெறுவதற்கு தமிழர்களுக்கு உரிமையுண்டு அதனை நாக்கு வழித்தோ அல்லது கெஞ்சியோ பெறவேண்டிய தேவை எமக்கில்லை வடகிழக்கு எமது தாயக நிலம் அதில் உள்ள அனேகமான பதவிகள் எங்களுக்கு உரியது அதனை யாரும் தர மறுத்தால் அதை கெஞ்சிபெறுங்கள் என்று தமிழர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை போராடிப்பெறுங்கள் என்றே உங்களுக்கு தமிழர்கள் வாக்களித்துள்ளனர் இதனை புரிந்துகொண்டு செயற்படுங்கள்.

இன்றுள்ள மைத்திரி அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அற்ப பதவிகளை வழங்கி வாயைமூடி வைத்துள்ளது. பதவிகளை பெற்றுக்கொண்டவர்களும் வாய்மூடி மௌனியாகவேஉள்ளனர். இது தான் இன்று மட்டக்களப்பிற்கு வந்த சாபக்கேடு.

“தங்களது உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடத் தவறுகின்ற இனம் இன்று மொரு இனத்திற்கு அடிமையாகவே வாழும் என்ற வரலாற்றை உணர்ந்து செயற்படுங்கள்”

SHARE