முள்ளிவாய்காலில் தப்பிக்க முயன்றபோதே பிரபாகரன் கொல்லப்பட்டார்-பென்சேகா கூறுவதை நம்புவதா? கருணா கூறுவதை நம்புவதா?

418

 

விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் விட்­டுக்­கொ­டுக்­காத தன்­மை­களே அவ்­வி­யக்கம் அழிந்­து­ போ­வ­தற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது. சில விட­யங்­களில் அவர் விடாப்பிடியாக இருக்­காமல் தந்­தி­ரோ­பா­ய­மாக காய்­ந­கர்த்­தி­யி­ருந்தால் புலிகள் இயக்­கத்தைப் பாது­காத்­தி­ருக்­கலாம். இயக்­கத்­தி­லி­ருந்­த­போது நான் அர­சியல் தீர்­வுக்கே அழுத்தம் கொடுத்தேன். எனினும் பிர­பா­கரன் அர­சியல் தீர்­வுக்கு விருப்பம் தெரி­விக்­க­வில்லை.

ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் ஆரம்பித்த­ ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தை­யின்­போது கொண்­டு­வ­ரப்­பட்ட உடன்­ப­டிக்­கையில், விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் அனு­ம­தி­பெ­றாமல் கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நானே மேற்­கொண்டேன். அதுவே விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­லி­ருந்து எனது வெளி­யேற்­றத்­திற்கு கார­ண­மாக அமைந்­தது.

real_dead_piraba364x473

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தலை வர் பிர­பா­கரன் அர­சியல் தீர்வை ஒரு போதும் விரும்­ப­வில்லை.   யுத்­தத்­தி­னூ­ டான தீர்­வையே அவர் எதிர்­பார்த்தார். அவ­ரது பிடி­வாதக் குணமே அவ்­வி­யக்கம் அழி­வ­டை­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும்.

இறுதி கட்ட யுத்­தத்­தின்­போது முள்­ளி­வாய்க்­கா­லி­லி­ருந்து தனது குழு­வுடன் தப்­பிக்க முற்­பட்ட வேளை­யி­லேயே அவர் கொல்­லப்­பட்டார் என முன்னாள் பிர­தி­ ய­மைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தெரி­வித்தார்.

வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அந்த செவ்­வியின் விபரம் வரு­மாறு,

கேள்வி: விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­கரன் தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக அண்­மையில் நீங்கள் குறிப்­பிட்­டி­ருந்­தீர்­களே…

பதில்: அது என்­னு­டைய தனிப்­பட்ட அபிப்­பி­ராயம். முள்­ளி­வாய்க்­கா­லுக்கு நான் நேர­டி­யாக சென்று பிர­பா­க­ரனின் சட­லத்தைப் பார்த்தேன். அவர் இறந்து கிடந்த விதத்தை , எனக்­குள்ள போர் அனு­ப­வத்தை அடிப்­ப­டை­யாக வைத்து பார்த்­த­போது அது தற்­கொ­லை­யாக இருக்­கலாம் என எனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யத்­தையே தெரி­வித்தேன்.

கேள்வி: விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனை உயி­ருடன் பிடித்து கொழும்­புக்கு கொண்­டு­வந்­த­தா­கவும் அப்­போது தெரி­விக்­கப்­பட்­டதே…

பதில்: அது மாத்­தி­ர­மல்ல, கொழும்­புக்கு கொண்­டு­வந்து அவரை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தாக்­கி­ய­தா­கவும் அதற்குப் பின்­னரே பிர­பா­கரன் கொலை செய்­யப்பட்­ட­தா­கவும் அப்­போது கூறப்­பட்­டது.

எனினும் அவற்றில் எவ்­வித உண்­மை­யு­மில்லை. முள்­ளி­வாய்க்கால் பிர­தே­சத்தில் இரவு நேரம் நடை­பெற்ற தாக்­குதல் சம்­பவம் ஒன்­றின்­போதே அவர் இறந்­துள்ளார். அத­னைத்­தொ­டர்ந்து சம்­பவம் நடை­பெற்ற தினத்தின் அதி­காலை வேளையில் இரா­ணு­வத்­தினர் தேடுதல் நட­வ­டிக்கையை மேற்­கொண்­ட­போது நந்­திக்­கடல் ஓரத்தில் பிர­பா­க­ரனின் சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

அதா­வது, விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் என்று அடை­யாளம் தெரி­யாது இரவு நேரம் நடை­பெற்ற தாக்­கு­த­லி­லேயே அவர் கொல்­லப்­பட்­டுள்ளார். எனினும் முள்­ளி­வாய்க்­காலில் பிர­பா­கரன் இருப்­பது இரா­ணு­வத்­திற்குத் தெரியும்.

சம்­பவ தினம் பிர­பா­கரன் தனது குழு­வுடன் அங்­கி­ருந்து தப்­பிச்­செல்­வ­தற்­காக முன்­னேறி வந்­துள்ளார். அப்­போது இரா­ணு­வத்­தினர் பதுங்கித் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். அத்­தாக்­கு­த­லின்­போதே அவர் இறந்­துள் ளார்.

கேள்வி: பிர­பா­க­ரனின் சட­லத்தை நீங்­களே முள்­ளி­வாய்க்காலுக்கு சென்று அடை­யா­ளப்­ப­டுத்­தி­னீர்கள். அதற்­கான அனு­மதி தங்­க­ளுக்கு யாரி­ட­மி­ருந்து கிடைத்­தது?

பதில்: அதற்­கான அனு­ம­தியை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு எனக்கு வழங்­கினார். அதனால் நான் கொழும்­பி­லி­ருந்து அங்கு சென்று சட­லத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தினேன்.

மேலும், என்னை விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தை காட்­டிக்­கொ­டுத்­த­தாகக் குறிப்­பி­டு­கின்­றனர். நான் அவ்­வாறு செய்­ய­ வில்லை. இயக்­கத்­தி­லி­ருந்து பிரிந்த பின் னர் ஒரே­யொரு முறைதான் நான் கள­மு­னைக்குச் சென்­றுள்ளேன்.

பிர­பா­க­ரனின் சட­லத்தை அடை­யாளம் காட்­டு­வ­தற்­காகவே கள­மு­னைக்குச் சென்றேன். முன் னாள் இரா­ணு­வத்­த­ள­பதி சரத்­பொன்­சே­கா வும் கருணா, யுத்த வெற்­றிக்கு எந்த வகை­யிலும் இரா­ணு­வத்­திற்கு உத­வி­செய்­ய­வில்லை என்றுதான் குறிப்­பிட்­டுள்ளார்.

கேள்வி: நீங்கள் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தி­லி­ருந்து பிரிந்து சென்­ற­மைக்­கான பிர­தான காரணம் என்ன?

பதில்: அதா­வது, ஜய­சிக்­குறு சண்டை முடி­வ­டைந்து பேச்­சு­வார்­த்தை நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­திற்கு அர­சியல் ரீதியில் பய­ணிப்­ப­தற்­கான சிறந்த வாய்ப்­புகள் ஏற்­பட்­டன.

அது தவிர சர்­வ­தேச ரீதியில் விடு­தலைப் புலிகள் இயக்கம் மீதான அழுத்தம் அதி­க­ரித்­தி­ருந்த காலம் அது. அமெ­ரிக்க இரட்டைக் கோபுர தாக்­குதல் நடந்த பின்னர் பயங்­க­ர­வாத அமைப்­பு­களை முடக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் அப்­போது சர்­வ­தேச ரீதியில் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தன.

அந்த கால­கட்­டத்­தில்தான் ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தன. எனவே அந்தப் பேச்­சு­வார்த்­தை­யினை அடித்­த­ள­மா­கக்­கொண்டு சமஷ்டி முறை­யி­லான தீர்­வொன்றை பெற்று, சர்­வ­தேச நெருக்­க­டி­யி­லி­ருந்து விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தை காப்­பாற்­றவே நான் முனைப்புக் காட்­டினேன். அத­னையே விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் ஆலோ­சகர் அன்டன் பால­சிங்­கமும் விரும்­பினார்.

எனினும் தொடர்ந்து ஆறு வரு­டங்­க­ளாக நடை­பெற்ற ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தையில் ஒரு இணக்­கப்­பாடும் எட்­டப்­ப­ட­வில்லை. ஒஸ்லோ பேச்­சு­வார்­த­தையில் நான் மற்றும் அன்டன் பால­சிங்கம் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்தோம்.

ஆறு வரு­டங்­களின் பின்னர் அங்கு நடை­பெற்ற பேச்­சு­வார்­த்­தை­யின்­போது ஒரு உடன்­ப­டிக்கை கொண்­டு­வ­ரப்­ப­ட்­டது. அதா­வது இனியும் பேச்­சு­வார்த்­தை­யினைத் தொடர்­வ­தாக இருந்தால் ஏதா­வ­தொரு புள்­ளி­யி­லி­ருந்து தொடங்க வேண்டும். அந்தப் புள்­ளி­யாக ‘சமஷ்டி முறை­யான தீர்­வைப்­பற்றி பரி­சீ­லிப்போம்’ எனக் குறிப்­பிட்டு உடன்­ப­டிக்கை கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனவே அந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்டால் பேச்­சு­வார்த்­தை­யினைத் தொட­ரலாம் எனக் குறிப்­பி­டப்­பட்­டது.

எனவே, தொடர்ந்து ஆறு வரு­டங்­க­ளாக மேற்­கொள்­ளப்ட்ட பேச்­சு­வார்த்­தையில் எவ்­வித இணக்­கப்­பாடு எட்­டா­த­தாலும் அப்­போ­தைய நிலையில் விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் மீதி­ருந்த சர்­வ­தேச அழுத்­தத்­தி­லி­ருந்து இயக்­கத்தை காப்­பாற்றும் நோக்­கிலும் அந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­மாறு அன்டன் பால­சிங்­கத்தை ஊக்­கப்­ப­டுத்­தினேன்.

எனினும் அவர், தலைவர் பிர­பா­க­ரனின் அனு­மதி பெற்ற பின்­னரே கைச்­சாத்­தி­டலாம் எனக் கூறினார். ‘நீங்கள் கைச்­சாத்­தி­டுங்கள். நான் தலை­வ­ரிடம் தெளி­வு­ப­டுத்­து­கிறேன்” என்று அன்டன் பால­சிங்­கத்தை ஊக்­கப்­ப­டுத்தி அவரை ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட வைத்தேன். உருத்­திர குமார், அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள யோகி மகேஸ்­வரன் ஆகி­யோ­ருக்கு இவ்­வி­டயம் நன்கு தெரியும்.

ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்ட பின்னர் நாட்­டுக்கு வந்­த­போது விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. போராட்­டத்தை சதிக்குள் கொண்டு சென்று புலிகள் இயக்­கத்தை வீழ்த்­து­வ­தற்­கான திட்­டமே குறித்த ஒப்­பந்­தம் எனக் கருதி பிர­பா­கரன் அதனை எதிர்த்தார். ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டுமாறு நான் ஊக்­கப்­படுத்­தி­ய­மையால் பிர­பா­கரன் என்­மீதே குற்­றச்­சாட்டை முன்­வைத்தார். அதனால் ஏற்­பட்ட முரண்­பாடே நான் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு கார­ண­மாக அமைந்தது.

கேள்வி: அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­ கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக் கும் உங்­க­ளுக்­கு­மி­டையில் இர­க­சிய உற­வி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றதே…

பதில்: ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் என்னை தாங்­கள்தான் புலிகள் இயக்­கத்­தி­லி­ருந்து பிரித்­த­தாகக் குறிப்­பி­டு­கின்­றனர். அது உண்­மை­யான கருத்­தும்தான். அப்­போ­தைய ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தைக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவே ஏற்­பாடு செய்­தி­ருந்தார். அந்த பேச்­சு­வார்த்­தையே எனது வெளி­யேற்­றத்­திற்கும் கார­ண­மாக அமைந்­தி­ருந்து. எனினும் இயக்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு எவரும் என்­னுடன் இர­க­சியப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை.

கேள்வி: பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மௌலா­ன­விற்கும் உங்­க­ளுக்­கு­மி­டையில் தொடர்­பி­ருந்­த­தாக குறிப்­பி­டப்­ப­டு­கி­றதே…

பதில்: ஆம், நிச்­ச­ய­மாக. அவ­ருக்கும் எனக்­கு­மி­டையில் நெருக்­க­மான உறவு இருந்­தது. வட மாகாண முஸ்­லிம்­களின் வெளி­யேற்றம், கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் படு­கொலை போன்ற சம்­ப­வங்­க­ளினால் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் குரோதம் காணப்­பட்­டது.

ஆகை­யினால் பாரா­ளு­மன்ற உறுப்­பி னர் அலி­சாஹிர் மௌலானா என்னுடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி இரு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவை வளர்ப்ப­தற்கு கடு­மை­யாகக் பாடு­பட்டார். அதனால் கிழக்கு மாகா­ணத்தில் இடம்­பெற்­று­வந்த கொள்ளைச் சம்­ப­வங்­க­ளைக்­கூட கட்­டுப்­ப­டுத்த முடிந்­தது. எனினும் விடு­த­லைப்­ பு­லிகள் இயக்­கத்­தி­லி­ருந்து என்னை பிரிப்­ப­தற்கு அவர் எவ்­வ­கை­யிலும் செயற்­ப­ட­வில்லை.

மேலும், விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தி­லி­ருந்து நான் பிரிந்­த­போதும் அவ­ருடன் தொடர்பு கொண்டு ‘தொடர்ந்தும் இயக்­கத்­துடன் இணைந்து யுத்தம் புரிய எனக்கு விருப்பம் இல்லை.அதனால் எனக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு’ அவ­ரி­டமே உதவி கோரினேன்.

அதனால் அவர் எனது பாது­காப்­புக்கு ஏற்­பாடு செய்து, அவரே என்னை கொழும்­புக்கு அழைத்து வந்தார். அவர் எனக்கு பாது­காப்பு வழங்­கி­யதால் விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினால் அவ­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருந்­தது. அப்­போ­தைய அர­சாங்­கத்தால் அவரின் பாது­காப்பை உறு­தி­செய்ய முடியவில்லை. அதனால் அவர் தனது எம்.பி. பத­வியை துறந்து வெளி­நாடு சென்றார்.

கேள்வி: விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பி­லி­ருந்து தாங்கள் வெளி­யே­றிய சம்­ப­வத்தை கூற முடி­யுமா?

பதில்: அப்­போது நான் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இருந்­த­போதும் நிர்­வாகக் கட்­ட­மைப்பில் புலி­களின் தரைப்­படைத் தள­ப­தி­யா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருந்தேன். முரண்­பாடு ஏற்­பட்ட பின்னர் பிர­பா­கரன் பேச்­சு­வார்­த்தை நடத்­து­வ­தற்கு என்னை யாழ்ப்­பா­ணத்­திற்கு அழைத்தார். எனினும் நான் பேச்­சு­வார்­த்­தைக்கு வர விரும்­ப­வில்லை என்­பதைத் தெரி­வித்தேன்.

அது இயக்­கத்தில் ஆளணிப் பற்­றாக்­குறை நில­விய சந்­தர்ப்பம். அப்­போது கட்­டாயப் பயிற்சி நடை­பெற்ற காலம். எனினும் எனது தலை­மையின் கீழ் கிழக்கு மாகா­ணத்தில் ஆறா­யிரம் போரா­ளிகள் இருந்­தனர்.

தலை­வ­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்கு நான் மறுப்புத் தெரி­வித்­ததைத் தொடர்ந்து, எனது தலை­மையின் கீழி­ருந்த ஆறா­யிரம் போரா­ளி­களை யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்­பு­மாறு வேண்­டிக்­கொண்­டனர். எனினும் அது ஒப்­பந்த காலம் என்­பதால் போரா­ளி­களை அங்கு அனுப்ப முடி­யாது எனக்­கூறி அதனை மறுத்து போரா­ளி­களை அவர்­களின் பெற்­றோர்­க­ளிடம் அனுப்பிக் கொண்­டி­ருந்தேன்.

அந்த சந்­தர்ப்­பத்தில் விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் மூதூ­ரி­னூ­டாக ஊட­றுத்து வாக­ரையில் தாக்­குதல் ஒன்றை நடத்­தினர். அதில் பலர் கொல்­லப்­பட்­டார்கள். அந்த தாக்­கு­தலை வர­லாற்றில் மறக்க முடி­யாது. அத்­துடன் இறந்து கிடந்த சட­லங்­களை அடக்கம் செய்­யக்­கூ­டாது எனவும் வாகரை மக்­க­ளுக்கு புலிகள் உத்­த­ர­விட்­டனர்.

எனவே எனது தலை­மையின் கீழி­ருந்த போரா­ளிகளை அவர்­க­ளது பெற்­றோர்­க­ளிடம் அனுப்­பி­வைத்த பின்­னர்தான் நான் அலி­சாஹிர் மௌலானா எம்.பி. யின் உதவி பெற்று கொழும்­புக்கு வந்தேன்.

கேள்வி: தாங்கள் இயக்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி கொழும்பு புறப்­பட்­ட­போது புலி­ களின் படை முகாம்கள் அமை­யப்­பெற்­றுள்ள விப­ரங்­களை மாத்­திரம் எடுத்­து­வந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே…

பதில்: இல்லை. அவ்­வாறு எத­னையும் நான் கொண்டு வர­வில்லை. எனது ஆடைகள் உள்ள பெட்­டி­யைக்­கூட எடுத்­து­வ­ர­வில்லை. மேலும் நான் புலிகள் இயக்­கத்தின் செயற்­பாடு பிடிக்­கா­ததால் வெளி­யேறி வந்­தேனே தவிர அவ்­வி­யக்­கத்­திற்கு துரோகம் செய்­ய­வேண்டும் என்­ப­தற்­காக வர­வில்லை. அதனால் அவ்­வி­யக்­கத்­திற்கு நான் ஒரு போதும் துரோகம் செய்­ய­வு­மில்லை.

கேள்வி: விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­திற்கு விமா­னங்­களும் இருந்­தன. அதற்கு வெளி­நா­டு­களின் உதவி இருந்­ததா?

பதில்: அதனை வெளி­நா­டு­களின் உதவி என்று சொல்ல முடி­யாது. ஏனெனில் வெளி­நா­டு­களில் விமானப் பயிற்சி கல்­லூ­ரிகள் உள்­ளன. விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் போரா­ளி­களை, அக்­கல்­லூ­ரி களில் பணம் செலுத்தி பயிற்சி பெற­வைத்­தனர். மேலும் விமா­னங்கள் நேர­டி­யாக இங்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. மாறாக விமா­னங்­களின் உதி­ரிப்­பாங்கள் கொண்­டு­வ­ரப்­பட்டு அவற்றை இலங்­கை­யி­லேயே பொருத்­தினர். இர­ணை­ம­டுவில் புலி­களின் விமான ஓடு­பாதை யொன்றும் இருந்­தது.

கேள்வி: யுத்­தக்­குற்­றங்­களை இரு­த­ரப்பும் மேற்­கொண்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது. எனவே அது தொடர்பில் தாங்­களும் பதில் சொல்­ல­வேண்­டிய தேவை­யுள்­ளதே…

பதில்: அதா­வது, ஐ.நா. அறிக்­கை­யா­னது இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது நடை­பெற்ற யுத்­தக்­குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கான பொறி­மு­றை­யாகும். எனினும் அவ்­வ­றிக்­கையின் ஒரு பந்­தியில் போரா­ளி­க­ளாக சிறு­வர்­களைச் சேர்த்­தமை தொடர்பில் ‘கருணா குழு’ எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ ளது.

எனவே, அவ்­வா­றான செயற்­பா­டு­களில் நான் ஈடு­ப­ட­வில்லை என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் என்­னிடம் உள்­ளன. ஆகவே அவ்­வா­றான விசா­ர­ணை­களை எதிர்­கொள்ள நான் தயா­ரா­க­வுள்ளேன்.

கேள்வி: விடு­த­லைப்­பு­லி­களின் தோல்­விக்கு தங்­களின் வெளி­யேற்­றமே கார­ண­மாக இருந்­த­தா­கவும் சொல்­லப்­ப­டு­கி­றதே…?

பதில்: நீங்கள் சொல்­வ­தை­விட, விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் விட்­டுக்­கொ­டுக்­காத தன்­மை­களே அவ்­வி­யக்கம் அழிந்­து­போ­வ­தற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது. சில விட­யங்­களில் அவர் விடாப்­பி­டி­யாக இருக்­காமல் தந்­தி­ரோ­பா­ய­மாக காய்­ந­கர்த்­தி­யி­ருந்தால் புலிகள் இயக்­கத்தைப் பாது­காத்­தி­ருக்­கலாம். இயக்­கத்­தி­லி­ருந்­த­போது நான் அர­சியல் தீர்­வுக்கே அழுத்தம் கொடுத்தேன். எனினும் பிர­பா­கரன் அர­சியல் தீர்­வுக்கு விருப்பம் தெரி­விக்­க­வில்லை. மாறாக யுத்­தத்­தி­னூ­டாக தீர்­வொன்றைப் பெறு­வ­தற்கே அவர் விரும்­பினார்.

மேலும், அவ்­வி­யக்­கத்தின் தோல்­விக்கும் எனக்கும் எவ்­வித சம்­பந்­தமும் இல்லை. எனினும் எனது வெளி­யேற்றம் அவ்­வி­யக்­கத்­திற்கு பல­வீ­ன­மாக அமைந்­தி­ருக்­கலாம். அல்­லது இறு­தி­கட்ட யுத்­தத்­தின்­போது யுத்த தந்­தி­ரோ­பாயம் தெரி­யாமல் சிக்கி தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கலாம்.

கேள்வி: கடந்த அரசாங்க ஆட்சியின் போது முன்னாள் புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி ஒப்பந்தக் கொலைகள் மேற் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தங்களின் உதவியையும் நாடிய சம்பவங்கள் உண்டா?

பதில்: இல்லை. ஒப்பந்தக் கொலைகள் என்பது முற்று முழுதாகத் தவறான கருத் தாகும். நான் விடுதலைப்புலிகள் இயக் கத்திலிருந்து விலகியதன் பின்னர் எந்த வொரு ஆயுதக் குழுக்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப­த­லை­வ­ராக பதவி வகிக்கும் நீங்கள் அக்­கட்­சி­யி­லி­ருந்து விலகி தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியில் இணை­ய­வுள்­ள­தாக குறிப்­பிட்டுள்­ளீர்கள். அது தொடர்பில்…

பதில்: விடு­தலை புலிகள் இயக்­கத்­தி­லி­ருந்­தது பிரிந்து ஒரு வரு­டத்தின் பின்னர் நான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யூ­டாக நேரடி அர­சி­யலில் இணைந்­து­கொண்டேன். அப் ­போ­தைய கால­கட்­டத்தில் குறித்த கட்­சி யில் இணைய வேண்­டிய அவ­சியம் இருந்­தது. அது காலத்தின் தேவை­யா­கவும் அமைந்­தது.

தற்போது தமிழ் கட்­சி­யொன்­றுடன் இணைந்து எனது அர­சியல் பய­ணத்தை தொடர்­வ­தற்கு நான் விரும்­பபுகிறேன். இணையும் தமிழ் கட்­சியும் இனக்­கு­ரோ­த­மற்ற ஜன­நா­யக பண்­பா­டு­களைப் பேணி­வ­ரு­கின்ற கட்­சி­யாக இருக்க வேண்டும் என்­பது எனது எதிர்­பார்ப்பு. அதனால் தமிழர் விடுதலை கூட்டணியில் இணைவதற்கு எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விடு­தலைப் புலிகள் உரு­வாக்­க­வில்லை என கூறப்படுகிறதே

பதில்: அது முற்று முழு­தாக தவ­றான விடயம். ஏனெனில் அக்­கட்­சி­யினை தோற்­று­விக்­கும்­போது நானும் அதில் பங்­கா­ள­னாக இருந்தேன். விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் அடித்­த­ளத்­தி­லி­ருந்தே தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உரு­வா­னது. மேலும் கிழக்கு மாகா­ணத்தை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே அக்­கட்­சியின் தோற்றம் அமைந்­தது.

குறித்த கட்­சியை உரு­வாக்­கு­வதில் சிவ­ராமன் என்­கின்ற தராக்­கியே முக்­கிய பங்கு வகித்தார். முதன் முதலில் அவரே குறித்த கட்­சியின் தோற்றம் பற்றி என்­னிடம் கதைத்தார். அதன் பின்னர் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்று விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் அனு­ம­தி­யு­ட­னேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­க­ப்பட்­டது.

ஆயினும் தனிக்­ கட்­சி­யொன்றை நிறு­வு­வ­தற்கும் நான் விரும்­ப­வில்லை.

ஏனெனில் அப்­போது யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தது. அதனால் யுத்தக் கொடூ­ரங்­களைத் தணிக்­கவும் பாதிக்­கப்­டு­கின்ற மக்­க­ளுக்கு உதவி செய்­யவும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க வேண்­டிய தேவை­யி­ருந்­தது. எனவே அக்­கா­லப்­ப­கு­தியில் அந்த வாய்ப்­பினை நான் நன்­றாகப் பயன்­ப­டுத்திக் கொண்டேன்.

மேலும் கிழக்கு மாகாண மக்­க­ளுக்கு ஒரு விட­யத்தை தெளி­வாகக் கூறி­யுள்ளேன். அதா­வது, ஒரு­போதும் நான் தேர்­தலில் போட்­டி­யிட மாட்டேன் என்­பதைத் தெரி­வித்­துள்ளேன். அத­னால்தான் கடந்த பொதுத் தேர்­த­லிலும் நான் போட்­டி­யி­ட­வில்லை. தேர்­தலில் போட்­டி­யிட எனக்கு சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை என சிலர் குறிப்­பி­டு­கி­ன­றனர். அது உண்­மைக்குப் புறம்­பான விடயம்.தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்னை வேண்­டிக்­கொண்­டது. எனினும் நானே வில­கிக்­கொண்டேன்.

கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மைத்­து­வத்­திற்குப் பின் னர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தங்­களை புறந்­தள்­ளி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றதே….

பதில்: அவ்­வா­றில்லை. அக்­கட்சி என் னை புறந்­தள்­ள­வில்லை. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி நிர்­வா­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒழுங்கு செய்­யும்­போது ஏற்­க­னவே நான் கட்­சியில் வகித்த பத­வி­யையே அவர் எனக்கு வழங்­கினார். அத்­துடன் மத்­திய குழு உறுப்­பி­ன­ரா­கவும் என்னை அமர்த்­தினார். தற்­போதும் நான் மத்­திய குழு உறுப்­பி­ன­ரா­கவே நான் பதவி வகிக்­கிறேன். கட்­சிக்குள் எனக்கு எவ்­வி­த­மான அழுத்­தங்­களும் இல்லை.

கேள்வி: தேர்­தலில் போட்­டி­யி­டாமல் தாங் கள் ஒதுங்­கிக்­கொள்­வ­தற்­கான காரணம் என்ன?

பதில்: பேரி­ன­வாதக் கட்­சி­யொன்றில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­று­வ­தென்­பது சுல­ப­மான விட­ய­மல்ல. தமிழ் மக்கள் கிழக்கு மாகா­ணத்தில் பேரி­ன­வாதக் கட்­சி­களில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்டும் சூழலை உரு­வாக்­கு­வ­தற்கு இன்னும் கால அவ­காசம் உள்­ளது.

அது தொடர்பில் தற்­போது மக்கள் மத்­தியில் தெளி­வினை ஏற்­ப­டுத்­து­வது சுல­ப­மான விட­ய­மல்ல. மேலும் ஒரு தேசிய கட்­சியில் அங்கம் வகிக்­கும்­போது அக்­கட்­சியின் கொள்­கைக்­கேற்­பவே நாம் செயற்­பட வேண்டும். அதனால் எமது கருத்துச் சுதந்­திரம் மழுங்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்­பு­களும் உள்­ளன.

ஏனெனில் இன்று தமிழ், முஸ்லிம் மக்­க­ளிடம் உள்ள மிகப்­பெ­ரிய பிரச்­சினை என்­ன­வென்றால், தனக்கு தற்­போ­துள்ள கட்­சி­யுடன் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்டின் அந்தக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி மற்­று­மொரு புதிய கட்­சியை உரு­வாக்­கு­வதே. நான் அதனை விரும்­ப­வில்லை.

அத­னால்தான் தமிழ் கட்­சி­களில் பாரம்­ப­ரி­யத்தைக் கொண்ட தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியைத் தெரிவு செய்தேன். ஆகவே அக்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன். வெகு விரைவில் சாத­க­மான பதில் கிடைக்கும் என எதிர்­பார்க்­கிறேன்.எனவே தற்­போது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தாகக் கூற­மு­டி­யாது. எனது விருப்­பத்தை மாத்­தி­ரமே தெரி­வித்­துள்ளேன்.

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியைப் பொறுத்­த­வ­ரையில் யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இற்றை வரைக்கும் காந்­திய வழியில் ஜன­நா­ய­கத்தைப் போதிக்­கின்ற ஒரு கட்சி. அக்­கட்சி ஒரு நாளும் யுத்­தத்தை ஆத­ரிக்­க­வில்லை.

யுத்­தத்தை எதிர்த்தே வந்­தள்­ளது. அத­னால்தான் அக்­கட்சி மழுங்­க­டிக்­க­பட்டு வந்­துள்­ளது. யுத்­ தத்தை எதிர்த்­த­த­னால்தான் அமிர்­த­லிங் கம், சிவ­சி­தம்­பரம், நீலம்­தி­ருச்­செல்வம் போன்ற தலை­வர்கள் கொலை செய்­யப்­பட்­டனர்.

ஆகவே தமி­ழர்கள் மத்­தியில் பாரம்­ப­ரியக் கட்­சி­யாக இருக்­கின்ற தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை மீண்டும் புத்­து­யிர்­கொ­டுத்து வளர்க்க வேண்டும் என்­பது எனது நோக்கம். வட­கி­ழக்கில் முன்­னைய காலத்தில் குறித்த கட்சி தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கான கட்­சி­யாக இருந்­தது. அந்தக் கட்­சி­யூ­டா­கத்தான் அமிர்­த­லிங்கம் எதிர்­கட்சித் தலை­வ­ராக பதவி வகித்தார். தற்­போ­தைய எதிர் கட்சித் தலை­வரும் அக்­கட்­சி­யூ­டா­கவே தெரிவு செய்­யப்­பட்­டவர்.

கேள்வி: பேரி­ன­வாதக் கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­று­வ­தென்­பது சுல­ப­மான விட­ய­மல்ல என்று குறிப்­பிட்­டீர்கள். எனவே தற்­போ­தைய நிலை யில் தமி­ழர்கள் மத்­தியில் பலம்­பொ­ருந்­திய கட்­சி­யாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து தங்­களின் அர­சியல் பய­ணத்தை தொடர்­வ­தற்கு முனை­ய­வில்­லையா?

பதில்: தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து செல்­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு அர­சியல் கட்­சி­யல்ல. அக்­கட்­சி­யினைப் பதிவு செய்­வ­தி­லேயே பிரச்­சி­னை­யுள்­ளது. அது தொடர்பில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளி­டையே முரண்­பட்ட கருத்­துள்­ளது.

இதே­வேளை, வட­மா­காண முத­ல­மைச்­ச­ரைக்­கூட அக்­கட்சி உதா­சீனம் செய்­வது போல் தெரி­கி­றது. எனினும் வட­மா­காண முத­ல­மைச்சர் மக்கள் மத்­தியில் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களை மதித்து சிறந்த முறையில் சேவை­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கிறார். அந்த விட­யத்தில் அவரை பாராட்ட வேண்­டி­யுள்­ளது. மேலும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தேர்தல் காலத்தில் இன­வா­தத்­தையே பேசு­கி­றது.

கேள்வி: சிவராம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்க முனைந்­த­மைக்­கான பின்­னணி என்ன?

பதில்: அவர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தை பிறப்­பி­ட­மாகக் ஒரு கல்விமான். அத்துடன் புௌாட் இயக்கத்தின் ஆரம்ப காலப் போராளி. இறுதியில் அவ்வியக்கத்தினாலேயே அவர் கொல்லப் பட்டார். அவர் விடுதலைப் புலிகள் இயக் கத்துடன் நன்கு தொடர்பைப் பேணி வந்தார். அவர் என்னிடமே அதிக தொடர் பினைக் வைத்துக்கொண்டார். தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு அவர் பின்வரும் ஆலோசனையைக் கூறி னார்.

அதாவது ஐரிஸ் நாட்டில் ஆயுதப்போ ராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஜெரிஅடம்ஸ் தலைமையில் அப் போராட்டத்திற்கு ஆதரவான ‘சிம்பெய்ன்’ என்கின்ற அரசியல் கட்சி பாராளுமன்றில் இருந்தது. அதேபோல் நாமும் இங்கு போராடும் போது எமக்கான அரசியல் கட்சியொன்று பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் வகிக்க வேண்டும் என்பதற் காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கபட்டது.

கேள்வி: தாங்கள் பிரதியமைசசர் பதவி வகித்த கடந்த அரசாங்க ஆட்சி யின்போதே தமிழ் மக்களுக்கு அதிகளா வன நெருக்கடிகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகி றதே….

பதில்: அவ்வாறில்லை. அதாவது போர்க் குற்றம் என்கின்ற விடயத்தை வேறாக நோக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு சில கட்டங்களில் நன்றி தெரிவிக்கவும் கட மைப்பட்டுள்ளோம்.

ஏனெனில், விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள பன்னிரெண்டாயிரம் போரா ளிகள் சரணடைந்தார்கள். அப் போது நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் அவர்களை விடுதலை செய்யு மாறு கேட்டுக்கொண்டேன். அதற்கி ணங்க சரணடைந்த 11,700 போராளி களை வழக்குப் பதிவு செய்யாமல் ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷ விடுதலை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் புனவாழ்வளிக்கப்பட்டு இன்று சுதந்திர மாக வாழ்கிறார்கள்.

எனினும் அரசியல் கைதிகளாக சிறை யில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் இந்த அரசாங்கத்தில் இழுபறி நிலையே காணப்படுகிறது. மேலும் அரசியல் கைதிகளாக சிறையில் இருப்பவர்களில் ஏராளமானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களல்ல.

98 சதவீதமானோர் அப்பாவிகளாகவே உள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சியின்போது அரசியல் தைிகளின் விடுதலை தொடர்பாக நான் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய போதும் அப்போதைய சூழ்நிலையில் அது முடியாமல் போய்விட்டது.

நேர்காணல்:– எம்.சி.நஜிமுதீன் படப்பிடிப்பு:– எம்.எஸ்.சலீம்

SHARE