முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் உட்­பி­ள­வுகள்-முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் இது ஒன்றும் புதிய விட­ய­மல்ல.

305

 

அர­சியல் கட்­சி­க­ளா­யினும் சரி, ஏனைய பொது நிறு­வ­னங்­க­ளா­யினும் சரி கருத்து முரண்­பா­டுகள் தோற்றம் பெறு­வது வழக்கம். அந்த வகையில் கடந்த காலங்­களில் அர­சியல் கட்­சிகள் பல பிள­வு­களைக் கண்­டுள்­ளன.

இதன் விளை­வாக பல புதிய அர­சியல் கட்­சிகள் தோற்றம் பெற்­றுள்­ளன. இதற்கு முஸ்லிம் அர­சி­யலும் விதி­வி­லக்­கல்ல.

இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவே லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தோற்­று­விக்­கப்­பட்­டது. அதன் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் இக் கட்­சியை தோற்­று­வித்து சுமார் ஒன்­றரை தசாப்த காலம் பல சவால்­க­ளுக்கு மத்­தியில் அதனை வழி­ந­டத்­திய போதிலும் அவ­ரது மறை­வுக்குப் பின் அக் கட்சி பல பிள­வு­களைச் சந்தித்தது.

தேசிய காங்­கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்றும் தேசிய ஐக்­கிய முன்­னணி என்றும் பலர் பிரிந்து நின்று முஸ்லிம் சமூ­கத்தின் ஒட்­டு­மொத்த அர­சியல் பலத்தை சித­ற­டித்­தனர். இதற்கு பிர­தான காரணம் முஸ்லிம் காங்­கி­ரசின் தலைமைப் பதவி தொடர்பில் எழுந்த போட்­டி­க­ளே­யாகும்.

பின்னர் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் மத்­தியில் நில­விய பதவி ஆசை­களை சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொண்ட பெரும்­பான்மை கட்­சிகள் இவர்­களை தம்­பக்கம் ஈர்த்­தன. இதன் விளைவு, உரிமைக் கோஷத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட முஸ்லிம் அர­சியல் பின்னர் சலுகை அல்­லது சர­ணா­கதி அர­சி­ய­லாக மாற்றம் பெற்­றது.

அதன் விளை­வையே இன்று முஸ்லிம் சமூகம் அனு­ப­வித்து வரு­கி­றது.

மேற்குறிப்பிட்ட உட்­கட்சி பிள­வு­களின் மற்­றொரு அத்­தி­யா­யம்தான் தற்­போது அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசின் தலை­வ­ருக்கும் செய­லா­ள­ருக்­கு­மி­டை­யி­லான முறுகல் நிலை­யாகும்.

கடந்த பொதுத் தேர்­தலின் பின்னர் தனக்கு தரு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்த தேசியப் பட்­டியல் எம்.பி. பத­வியை தராது ஏமாற்­றினார் என்ற கார­ணத்­தினால் அ.இ.ம.காங்­கிரஸ் செய­லாளர் வை.எல்.எஸ். ஹமீட் கட்சித் தலை­மை­யுடன் முரண்­பட்டார். இத­னை­ய­டுத்து அவர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­தாக தலைவர் ரிஷாட் பதி­யுதீன் அறி­வித்தார்.

எனினும் தன்னை யாராலும் நீக்க முடி­யாது என்றும் தானே சட்ட ரீதி­யான செய­லாளர் என்றும் ஹமீட் தொடர்ச்­சி­யாக கூறி வரு­கிறார்.

இதனைப் பொருட்­ப­டுத்­தாத கட்சித் தலைமை நேற்று முன்­தினம் குரு­நா­கலில் பேராளர் மாநாட்டைக் கூட்டி கட்­சியின் யாப்பை மாற்­றி­ய­மைத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இதற்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்பேன் என ஹமீட் பதி­லுக்கு கார­சா­ர­மான அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் இது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. முஸ்லிம் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­று­மையை வலி­யு­றுத்­தியும் இக் கட்­சி­க­ளுக்­குள்ளே நிலவும் உட்­பூ­சல்­களை களைய வேண்­டி­யதன் அவ­சியம் பற்­றியும் எழுதி, பேசி புளித்துப் போய்­விட்­டது. இதன் பின்­னரும் சமூக நல­னுக்­காக ஒற்­று­மைப்­ப­டு­வார்கள் என்று நம்­பு­வதும் முட்­டாள்­த­ன­மாகும்.

எப்­போது முஸ்லிம் அர­சி­யலை பதவி ஆசை என்ற புற்று நோய் தொற்­றி­யதோ அன்­றி­லி­ருந்தே அதன் அழிவும் ஆரம்­ப­மா­கி­விட்­டது. இப்­போது முஸ்லிம் அர­சியல் அழிவின் விளிம்பில் வந்து நிற்­கி­றது. மருந்து செய்ய முடி­யாத இறுதிக் கட்ட புற்று நோயாக அது மாறி­விட்­டது.

முஸ்லிம் காங்­கி­ர­சி­லி­ருந்து பிரிந்த தேசிய காங்­கிரஸ் இப்­போது இருக்­கி­றதா இல்­லையா? அதன் தலைவர் எங்கே? என்­பது யாருக்கும் தெரி­யாது. அஷ்ரப் ஆசை­யோடு உரு­வாக்­கிய நுஆவும் கைமா­றி­விட்­டது. தாய்க் கட்­சி­யான முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் அக் கட்சியின் தலைமை சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக கட்சிப் போராளிகளே விமர்சிக்குமளவு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஆக, மொத்தத்தில் முஸ்லிம் அரசியலை இறைவன் நாடினாலேயன்றி வேறு எவராலும் காப்பாற்ற முடியாது என்கின்ற கையறு நிலைக்கே அது வந்து நிற்கிறது.

SHARE