TNA அமைப்பு முஸ்லீம்கள் விடயத்தில் புத்திசாலித்தனத்தை கையாள்வது தற்போதைய காலகட்டத்தில் நல்லது

502

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். அதில் குறிப்பிடப்பட்ட விடயமாவது, ‘தமிழ் முஸ்லீம் மோதல்களுக்கு தூபமிட்டு உனது சூழ்ச்சியை காட்டாதே’ ‘TNA சதியில் இருந்து எங்களை பாதுகாருங்கள்’ ‘P1030442இந்திய வீட்டுத்திட்டத்தினை நாங்கள் புறக்கணிக்கவில்லை’ ‘இன மத அரசியலுக்கு அப்பால் செயற்படும் அமைச்சரை இழிவுபடுத்தாதே’ என்ற வாசகங்களை ஏந்தியவாறு வவுனியா முஸ்லீம் பள்ளியிலிருந்து ஊர்வலமாகச் சென்று, வவுனியா அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

P1030445

இவ்வார்ப்பாட்டத்தில் TNA பதாதைக்கு செருப்பினால் அடிப்பதையும் காணலாம். இன்று முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசினால் தமக்கு ஒரு பிரச்சினை வருகின்றபொழுது ஒற்றுமையைப் பற்றிப்பேசுகின்றார்கள். நாளை தமிழ் மக்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என்பதில் என்ன நம்பிக்கை இருக்கிறது. நன்றி மறப்பது நன்றன்று

P1030439 P1030440 P1030444 P1030443 P1030442

 

T P N

SHARE