தோட்டத் தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அமைச்சர் நவீன் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் மௌணம், பத்திரிக்கையில் வீரம்

303

 

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கா மட்டுமல்ல இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு கைகோர்த்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.

12243583_168863830132159_443933002905509644_n

இது ஐக்கிய தேசிய கட்சியின் நிழலில் வாழ்பவர்களின் அரசியல் இருப்பை ஆட்டம் காண செய்துவிடும் என்ற பயத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்கா தெரிவித்த கருத்துக்களுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசை சம்பந்தப்படுத்தி அறிக்கை விடுகின்றனர். என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை நேரடியாக தெரிவிக்குமே தவிர தூதுவர்களை வைத்து கருத்து தெரிவிக்கும் அளவிற்கு தோட்ட தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு அண்ணியர்கள் அல்ல.
தேர்தலில் வாக்கு வாங்குவதற்காக வாக்குறிதி கொடுக்கும் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கு தோட்ட தொழிலாளர்களின் வருத்தம் புரிவதில்லை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை வைத்து அரசியல் குளிர்காய்வதை தவிர இவர்களுக்கு ஆக்கபூர்வமாக எதையாவது செய்ய முடிந்ததா?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கோரிய போது அது சாத்திமே இல்லை என்று கூறி தோட்ட கம்பனிகளுக்கு சாதகமாக அறிக்கைவிட்ட அறைவேட்காடு தொழிற்சங்கங்களே இவைகள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்காக மெதுவாக பனிசெய்யும் போராட்டத்தை நடத்திய போது இந்த போராட்டத்திற்கும் தமது தொழிற்சங்கங்களுக்கம் எவ்வித தொடர்பும் கிடையாது என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடிதமெழுதி மெதுவாக பனிசெய்யும் போராட்டத்தை மழுங்கடிக்க தோட்ட கம்பனிகளுக்கு துனைபோன துரோகிகளே சம்பளத்தை வைத்து இன்று அறிக்கை அரசியல் நடத்துகின்றனர். தோட்டத் தொழிலாளர் சம்பளத்திற்காக தலவாக்கலையில் அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்தியதையும், அரசாங்கம் அமைத்த அடுத்த கணமே தோட்டத் தொழிலாளருக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்போம் என அதே தலவாக்கலை நகரத்தில் கூறி வாக்கு வாங்கியதையும்;, பிரதமர் ஜப்பான் சென்று திரும்பியதும் சம்பளம் என்று கூறியதையும், பிரதமர் இந்தியாவிலிருந்து வந்தவுடன் சம்பளம் என்று ஏமாற்றியதையும் தோட்டத் தொழிலாளர்கள் மறந்துவிட்டர்கள் என்று என்னவேண்டாம். தோட்ட தொழிலாளர்களை அப்பட்டமாக காட்டிக்கொடுத்துவிட்டு இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது பழிபோட்டுவிட்டு தப்பிவிடமுடியாது. ஆறுபது ரூபா, நூறு ரூபா சம்பள அதிகரிப்பென்றால் அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்பொழுதே பெற்றுக்கொடுத்திருக்கும். இந்த நாளொன்றுக்கு 100ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கும் யோசணையை தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூட்டு ஒப்பந்த பேச்சு வார்தையின் போதே முன்வைத்தார் ஆனால் அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அப்போதே நிராகரித்துவிட்டது. அனால் தற்போது சிலர் அதற்கு உரிமை கொண்டாட முற்படுவதையும், அவர்களின் கையாலாகாதனத்தை பார்த்து பரிதாபப்படுகிறோம்.
தலவாக்கலை மகளீர்தின விழாவில் தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிலைப்பாட்டை காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெட்டத்தெழிவாக தெரிவித்துவிட்டார். தற்போதய நிலையில் பெருந்தோட்டங்கள் பறிபோய்விடுவதையோ, தொழிலாளர்கள் வீதிக்கு வருவதையோ அந்த மக்களுக்காகவே உறுவாக்கப்பட்டு அந்த மக்களை பாதுகாத்து வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க பாராளுமன்றத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கருத்துக்கு தெரிவித்தபோது அதற்கு எதிராக அறிக்கைவிடுபவர்களின் கட்சியை சார்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பத்திரிக்கைக்கு அறிக்கை விடுவதற்கு முன்னால் பாராளுமன்றத்தில் அல்லவா இது பற்றி பேசியிருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் மௌனம் பத்திரிக்கையில் வீரம் இதுதானா? தற்போதய மலையகத்தின் முற்போக்கு அரசியல்? பாராளுமன்றத்தில் பேசாமைக்கு ஐக்கிய தேசிய கட்சிமீதுள்ள
மலையக மக்களும், தோட்டத் தொழிலாளர்களும், குறிப்பாக மலையக பெண்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மீது வைத்திருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தகர்த்துவிடலாமென கணவு கண்டவர்களின் கற்பனையை தகர்தெரிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மகளீர் தின நிகழ்வுகளை பொருக்க முடியாதவர்கள் வெளியிடும் விசமத்தனமான அறிக்கைகளின் மூலம் மலையக மக்களை பலவீனபடுத்த முடியாது எனவும் கணபதி கனகராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SHARE