தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் டோலிவுட்டில் வெற்றி மன்னனாக வலம் வந்த நேரத்தில் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் கட்சி ஆரம்பித்து பின் அதில் தோல்வியுற்று மறுபடியும் தற்போது சினிமாவிற்கே வரயிருக்கிறார்.
ஆனால் அவருக்கு பிடித்தது போல் எந்த கதையும் அமையவில்லையாம், முன்னணி இயக்குனர்கள் சொன்ன எந்த கதையிலும் இவருக்கு விருப்பம் இல்லை, எனவே புதுமாதிரியான ஒரு விளம்பரத்தை விடுத்துள்ளார் சிரஞ்சீவி.
இதில் இவருக்கு பிடித்தது போல் யார் கதை சொல்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி தருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு அவர் அமைத்துள்ள குழுவிடம் கதை சொல்ல வேண்டும். அந்த குழுவிற்கு கதை பிடித்திருந்தால் அவர்கள் சிரஞ்சீவிடம் அழைத்து சொல்வார்களாம். மேலும் இது அவரது 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.