இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள்,

487

 

ஒரு அரசாங்கத்தாலே நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் மேல் நடத்தப்பட்டதாகவே இருக்கும்,இந்தப் இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள், ஊனமுற்றவர்கள், வயதானவர்கள் ,உடல்நிலை மோசமானவர்கள் ,போர் கைதிகள், கட்டாய தொழிலாளர்கள்,விமர்சகர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், யூதர்கள், ஸ்லேவ்ஸ்,செர்பியர்கள், ஜெர்மனி, செக், இத்தாலியர்கள், போலந்தினர், பிரஞ்சு,உக்ரைனியர்கள், மற்றும் பலர். இதில் எண்ணிக்கையில் 1,000,000 பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தனர்.

ukrane_003

முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட கடும் தோல்வி ஜெர்மனியை திருப்பி போட்டது,இந்த தோல்விக்கு யூதர்களும் கம்யூனிஸ்ட்களும் தான் காரணம் என்று ஹிட்லர் அழுத்தமாக நம்பினார்,யூதர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற எண்ணம் அவரின் மனதில் அழுத்தமாக பதிந்தது,ஆரியர்களே உயர்ந்தவர்கள் அவர்களே நாடாளும் தகுதியுள்ளவர்கள் தானும் ஒரு ஆரியனே என்று ஹிட்லர் திட்டவட்டமாக நம்பினார்,அவரும் ஒரு ஆரியனே என்று குறிப்பிட காரணம்,ஹிட்லரின் ஒன்னு விட்ட தாத்தா யூதனாக இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

1994 ஆம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலை சம்பவம் சம காலத்தில் நடந்த அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான நிகழ்வுகளில் ஓன்று, மனித சமுதாயத்தில் நடந்த மிக கொடூரமான நிகழ்வுகளில் ஒன்று,

இந்தப் படுகொலை நடந்த காலகட்டமான ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 1994 க்குள்(நூறு நாட்களில் ) பத்து லட்சம் தூட்சி மற்றும் சொற்பமான சில ஹுடுஸ் கொல்லப்பட்டனர், இந்த எண்ணிக்கை இருபது லட்சத்தை தாண்டலாம் என்று

சமிபத்திய அறிக்கை ஓன்று கூறுகின்றது,

இந்தப் படுகொலை நடந்த காலத்தில் ஒரு நிமிடத்தில்,ஒவ்வொரு மணிநேரத்திலும் ,ஒவ்வொரு நாளும் ஆறு பேர் (ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள்) கொல்லப்பட்டனர்,இந்த சதவிகிதம் இந்தப்

படுகொலை நடந்த மூன்று மாதங்களும் குறையாமல் நடந்தேறியது.

ஐந்து லட்சங்களுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர்,இதில் HIV யால் பாதிக்கப்பட்ட ஆண்களை ஆயுதமாக பயன்படுத்தி இந்த பாலியல் வல்லுறவுகள் நடத்தப்பட்டன ,இதனால் 67 % பெண்கள் HIV யால் பாதிக்கப்பட்டனர்,இந்த கற்பழிப்பால் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் இருபதாயிரம்.

ஐம்பதாயிரம் விதவைகள்,எழுபத்தைந்தாயிரம் அனாதைகள்,நாற்பதாயிரம் வீடுகளை இழந்தவர்கள்.இப்படி ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அசிங்கப்பட வேண்டிய கொடூரமான நிகழ்வு தடுக்க வக்கற்ற அனைத்து உலக நாடுகளின் பார்வையின் கீழ் நடந்தேறியது,

21732758.jpg

ரியல் மற்றும் ரீல்

இந்தப் படுகொலைகள் நடந்த காலத்தில் ருவாண்டாவில் உள்ள ஜெர்மானிய ஹோட்டல் (டெஸ் மில்லே காலின்ஸ்) ஸில் உதவி மேலாளராக பணிபுரிந்த பால்ருசெஸ்பெகின ஹோட்டலில் மறைத்து வைத்து 1268 தூட்சி இன மக்களை காப்பாற்றி உள்ளார்,நிஜ வாழ்க்கை ஹீரோவான இவரது இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஹோட்டல் ருவாண்டா என்றொரு படம் 2004 லில் வெளிவந்தது,அந்த கொடுரம் நடந்த மூன்று மாதங்களையும்,அதன் பதபதைப்பையும்,ஐ நா வின் கையாலாகாத தனத்தையும் டெர்ரி ஜார்ஜ் அருமையாக படமாக்கி இருப்பார்.

 

ஹிட்லர் ஒருபக்கம் ஐரோப்பாவை கூறு போட்டுகொண்டிருந்த காலகட்டத்தில்,(பிரிட்டனே அவரை பார்த்து கொஞ்சம் பயப்படத்தான் செய்தது,என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்,ஹிட்லர் ரஷ்யாவின் மேல் படை எடுத்ததற்கு பதில் பிரட்டன் மேல் படை எடுத்திருந்தால் வரலாறே மாறி இருக்கும்,பிரான்ஸ்ஷை கைப்பற்றும் போது கொஞ்சம் பயந்து கைகட்டி தானே நின்றது பிரட்டன்,),ஜப்பானும் சீனாவை கூறு போட ஆரம்பித்தது,தன் நாட்டில் உள்ள வளங்களின் தட்டுப்பாட்டை சீனா மூலம் சரிகட்டவது ஜப்பானின் நோக்கம்,சீனாவில் அவர்கள் செய்த அட்டூழியங்களை படித்தால் அவர்கள் மேல் அமெரிக்கா அணுகுண்டு போட்டது ஒன்னும் தப்பில்லை என்றே தோன்றுகிறது,(இப்போ அவர்கள் சாந்த சொருபிகளாகி விட்டார்கள்)

photo56-e2.jpgகம்போர்ட் வுமன் இந்த வார்த்தை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடும் ஜப்பான் ராணுவ வீரர்களின் காம இச்சையை தீர்க்க அரசாங்கத்தாலையே ஏற்பாடு

செய்யப்படும் பெண்களை குறிக்கும், கொரியா,ஆஸ்திரேலியா,பிலிப்பைன்ஸ்,சீனா போன்ற நாடுகளில் இருந்து தொழிற்சாலைகளில் வேலை வாங்கித்தருவதாக பெண்களை கூட்டிக்கொண்டு வந்து கம்போர்ட் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் சித்திரவதை அரங்கில் வைத்து ஒரு நாளைக்கு குறைந்தது அறுபது முறையாவது ஜப்பான் ராணுவ வீரர்களால் தொடர்ந்து கற்பழிக்கப்படுவார்கள்,

அவர்கள் செய்த கொடூரங்களில் ஒன்றை மட்டும் பார்ப்போம்,Rape of Nanking, Nanking முன்னாள் சீனாவின் தலைநகர்,இரண்டாம் சினோ – ஜப்பான் போரின் போது நான்கிங்கில் அவர்கள்

செய்த படுகொலைகள் மட்டும் 2,60,000 பேர்,இந்த படுகொலைகள் வெறும் ஆறே வாரத்தில் நடந்தேறியது,அதில் அவர்கள் செய்த பாலியல் வல்லுறவுகள் மட்டும் அறுபதாயிரம்,

அங்கு அவர்கள் செய்த அட்டூழியங்கள் சில,

நன்கிங்க்கில் உள்ள பெரும்பான்மையான ஆண்களை மொத்தமாக காலி இடத்தில் நிற்க வைத்து சுட்டு தள்ளப்பட்டனர்.

பெண்கள் அனைவரும் கற்பழிக்கப் பட்டு பின்பு கொல்லப்பட்டனர்,இதில் வயதானவர்களும் விதிவிலக்கல்ல,

aak.jpg

பெரும்பாலான பெண்கள் நிர்வாணமாக நாற்காலி,கட்டில்,தூண் போன்றவற்றில் கற்பழிப்பதற்கு ஏற்ற வகையில் நிரந்தரமாக கட்டப்பட்டனர்,ஒரே பெண்ணை மூன்று நாளில் 200 க்கும் மேற்ப்பட்ட ஜப்பான் ராணுவ வீரர்கள் கற்பழித்துள்ளனர்,ஒரு கேனிபல் ஹோலோகாஸ்ட்டே நடந்துள்ளது,

நாளுக்கு நாள் இவர்கள் சேடிசம் அதிகரித்து கொண்டே போக,தங்கள் மகிழ்ச்சிக்காக விதவிதமாக கொலைகள் அரங்கேறியது,மருமகன் முன் மகளை தந்தையை விட்டு கற்பழிக்க செய்வது,அண்ணன் தங்கையை,மகன் தாயை மறுப்பவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்,இதை மறுத்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம்,இதைப் பற்றி நான் படித்தவைகளில் ஒரு சதவீதம் கூட இங்கு எழுதவில்லை,படித்தவைகளை எழுத மனம் வரவில்லை,அந்தளவுக்கு கொடுரம்,இந்த சம்பவத்துக்கு மவுன சாட்சிகளாக இதில் இருந்து தப்பித்த பெண்கள் சிலர் இன்றும் கொரியா,சீனாவில் உயிருடன் வாழ்கிறார்கள்,இந்த சம்பவத்துக்கு ஜப்பான் பிரதமராகளாக பதவி ஏற்கும் ஒவ்வொருவரும் காலங்காலமாக மன்னிப்பு கேட்டபது இன்றும் தொடருகிறது,

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து city of life and death என்று ஒரு படம் வெளிவந்துள்ளது,Nanking Massacre வைத்து பல படங்கள் வந்துள்ள போதும் இதுவே இதுவரையில் வந்த படங்களில் சிறந்த படம் என்று சீனர்கள் அடித்து கூறுகிறார்கள்,படம் மிக அருமை,கேமரா அருமை இப்படி டெம்ப்ளேட் தனமாக கூற விரும்பவில்லை,ஒரே வார்த்தை Worth to watch, Chaun Lu படத்தின் இயக்குனர்

SHARE