கெயிலின் சாதனையை முறியடித்த வீராட் கோலி

290

 

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று மொகாலியில் நடந்த வாழ்வா.. சாவா ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 160 ரன்கள் எடுத்தது.பின்னர் இந்தியா தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்த நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி கடைசி நேரத்தில் அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

அவர் 78 நிமிடங்கள் களத்தில் நின்று 51 பந்தில் 82 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்கர்களும் அடங்கும். இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய கோலி அதிவேகமாக 1500 ஓட்டங்களை கடந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையையும் முறியடித்தார்.

முன்னதாக கிறிஸ் கெய்ல் 39 இன்னிங்ஸ்களில் 1500 ஓட்டங்களை தொட்டு சாதனை படைத்திருந்தார். ஆனால் கோஹ்லி இதை 39 இன்னிங்ஸ்களில் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ஓட்டங்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

எதிர்வரும் 31ம் திகதி மும்பையில் நடைபெறும் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற வீராட்கோலி கூறியதாவது:-

ரசிகர்களின் ஆதரவு நம்ப முடியாத வகையில் இருந்தது. இந்த ஆதரவு அபாரமாக விளையாட உதவியாக இருந்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஓவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு சவாலானதே. கிரிக்கெட் வீரர்கள் அதில் இருந்து மேம்பட வேண்டும்.

யுவராஜ்சிங் என்னுடன் இணைந்து நல்ல பார்ட்னர் ஷிப் கொடுத்தார். பின்னர் டோனி இணைந்து சிறந்த ஜோடியை அமைத்தார். நாங்கள் இருவரும் நன்றாக புரிந்து கொண்டு வேகமாக ஆடுபவர்கள். இதற்கு நாங்கள் பெற்ற உடற்பயிற்சிதான் காரணம்.

இந்த ஆட்டம் எனது ’டாப் 3’ இன்னிங்சில் ஒன்றாகும். அனேகமாக இந்த ஆட்டம்தான் சிறந்ததாக கருதுகிறேன். இன்றைய நாள் நான் மிகவும் நெருக்கடியில் விளையாடினேன். ஆஸ்திரேலியா சிறந்த அணியாகும். இந்த ஆட்டம் எங்களுக்கு கால் இறுதி போல் இருந்தது. இவ்வாறு வீராட் கோலி கூறியுள்ளார்.

SHARE