எனது அனுமதியின்றி எனது ஒப்புதல் பெறாமல் அந்த கூட்டத்தினை நடத்த முற்பட்டனர்-வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கே.தேவராஜா

268

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவிற்கு எந்த விதமான நிதியும் கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கே.தேவராஜா தெரிவித்துள்ளார்.

4419af34-c0dc-40f0-aebc-7bd209995ff5

வவுனியா வாடி வீடு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 2009 ஆண்டுக்குப் பின்னர் மனித உரிமைகள் தொடர்பாகவும் காணமல் போனவர்கள் போன்ற விடங்களிலும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்கள் காணி ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்கள் அத்தனையையும் எம்மீது தாங்கிக் கொண்டு நகர்த்தி வந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்து வந்துள்ளேன்.

பிரஜைகள் குழுவானது 8மாவட்டங்களிலும் பெறுமதி வாய்ந்த ஒரு குழுவாக தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற இந்த சமயத்தில் கடந்த 05.03.2016 அன்று எமது நிர்வாக உறுப்பினர்கள் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்ய முற்பட்டனர்.

அன்றைய கூட்டத்தினை நிர்வாக குழு கூட்டமாக கூட வேண்டும் அந்த நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு அமைய நாங்கள் பொதுச் சபையை கூட்டி புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்ய வேண்டும் என நான் தெரியப்படுத்தியும்.

எனது அனுமதியின்றி எனது ஒப்புதல் பெறாமல் அந்த கூட்டத்தினை நடத்த முற்பட்டனர். ஆனால் அந்த கூட்டம் இடை நிறுத்தப்பட்டு விட்டது.

உங்களிடம் இருக்கும் நிதி பிரச்சினை தான் இந்த பிரஜைகள் குழுவின் பிளவுக்கு காரணமா? என ஊடகவியளாளர் கேள்வியெழும்பியதற்கு,

இது வரையில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவிற்கு எந்த விதமான நிதியும் கிடைக்கவில்லை. எந்த நிதியையும் வைத்து பிரஜைகள் குழுவின் செயற்பாடுகளை முன்னேடுக்கவில்லை என தெரிவித்தார்.

SHARE