வறுமையிலும் மட்டக்களப்பு பெண் சாதனை; ஒரே ஒரு தமிழ் பெண் கபடி அணியின் தேசிய மட்டத்திற்கு தெரிவு

307

 

மட்டக்களப்பு மாவட்டத்தல் பெண்கள் கபடி அணியியில் ஒரே ஒரு தமிழ்ப்பெண் இடம் பிடித்துள்ளார். மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி வயது 19 என்ற பெண்மணியே தேசிய கபடி அணிக்கு தெரிவாகியுள்ளார்.

4130a821-f419-42b2-82f2-0e19cbdd9454 a7e8e170-0b9a-4e0c-918b-a4df2f72c16e b74f846e-b281-48bc-9e74-686d0f11a048 becc47d0-90b1-4d65-b50e-9d977837b017 c8448f34-1751-4df3-8c44-50ebdc0f62d8

கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர் 12 பேர் கொண்ட அணியில் 11 சிங்கள பெண்கள் மத்தியில் ஒரு தமிழ் பெண்மணியாக தெரிவாகியுள்ளார்.  எதிர் வரும் 8 ம் மாதம் தனது 1 வது கபடி போட்டியில் பங்குபெற்ற ஈரான் நாடு பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று(05) இவரை நேரில் சென்று பார்வையிட்ட பா.உ சதாசிவம் வியாழேந்திரன்(அமல்) இவரை வாழ்த்தி சிறு தொகை  ஊக்கிவிப்புப் பணவுதவியையும் வழங்கினார்.

செல்வி.கஜேந்தினி  தனது வறுமை மத்தியிலும் தாம் இந்த வெற்றியைப் பெற்றதில்  மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், கிரான் ஐக்கிய விளையாட்டுக் களகத்திற்கும், பயிற்சிவிப்பாளருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

K. SUBAJAN

SHARE